முந்திரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று நீங்கள் நினைத்திருந்தால், அது மிகவும் தவறு. முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்பு சத்து உள்ளது. முந்திரி உங்களுக்கு சக்தி மற்றும் ஊட்டசத்தை தருகிறது.
இந்நிலையில் 100 கிராம் முந்திரியில் என்ன சத்து உள்ளது என்பதை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள் : 553, கொழுப்பு சத்து: 44 கிராம், சாச்சுரேடட் கொழுப்பு சத்து: 8 கிராம், பாலிசாச்சுரேடட் கொழுப்பு சத்து: 48 கிராம், மோனோ சாச்சுரேடட் கொழுப்பு சத்து: 24 கிராம், கார்போஹைட்ரேட்: 30 கிராம், நார்சத்து: .3.3கிராம், சர்க்கரை : 5.9கிராம், புரத சத்து: 18 கிராம், மெக்னீஷியம், பொட்டாஷியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், சிங், காப்பர் உள்ளது.
இந்நிலையில் இதில் உள்ள மோனோ சாச்சுரேடட் மற்றும் பாலிசாச்சுரேடட் கொழுப்பு சத்து மற்றும் மெக்னீஷியம் எலும்பை கூடுதல் வலுவாக்கும்.
மேலும் இதில் இரும்பு சத்து உள்ளதால், ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டான லுட்டின், சியாந்தின், கண் ஆரோக்கியத்தை கூடுதல் வலுவாக்கும்.
இதில் குறைந்த சர்க்கரை அளவு மற்றும் கூடுதல் நார்சத்து இருப்பதால் சுகர் பேஷண்ட்ஸ் இதை மிதமான அளவில் சாப்பிடலாம். இதில் அதிக போலிக் ஆசிட் இருப்பதால், இது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“