உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது உறுதியாகிவிட்டால் நீங்கள் நிச்சயம், வாரத்திற்கு 5 நாட்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடல் பயிற்சி செய்ய வேண்டும்.
நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், உணவை எப்படி சக்தியாக மாற்றும் செயல்முறையில் பாதிப்பு ஏற்படுகிறது. நாம் உணவை சாப்பிடும்போது, நமது உடல் அதை உடைத்து அதை சர்க்கரையாக மாற்றி ரத்தத்தில் கலக்கிறது. இந்த ரத்த சர்க்கரை அதிகமாகும்போது, இது கணையத்தை தூண்டி இன்சிலினை சுறக்க செய்கிறது. இந்த இன்சுலின் செயல்பட்டு உணவை சக்தியாக மாற்றுகிறது. தற்போது உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால், இன்சுலின் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் ரத்தில் சர்க்கையின் அளவு அதிகரிக்கும்.
இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு 5 நாட்கள் கட்டாயம் உடல் பயிற்சி செய்ய வேண்டும். வேலையின் நிமித்தமாக நாள் முழுவதும் உட்கார்ந்தே இருப்பவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, சிறிது நடந்து பயிற்சி செய்துவிட்டு மீண்டும் பணியை தொடங்க வேண்டும்.
மேலும் நடைபயிற்சி, மெதுவாக ஓடுவது, நீச்சல் போன்ற பயிற்சிகளுடன், உடல் பயிற்சி கூடத்திற்கு சென்று குறைந்த எடையை வைத்து பயிற்சி செய்யலாம். அதுபோலவே பல்வேறு மெஷின்களிலும் உடல் பயிற்சி செய்யலாம். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும். உங்கள் செயல்திறனை அதிகரிக்கும். உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ள முடியும். இதய நோய் மற்றும் பக்கவாதாம் ஏற்படாமல் தடுக்கும்.
இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் உடல் பயிற்சி செய்வதற்கு முன்பு பிஸ்கட், பாதாம் அல்லது வால் நட் ஆகியவற்றை சாப்பிடலாம். உடல் பயிற்சி என்பது இன்சுலின் போல முக்கியமானது.