வெந்தயத்தில் அதிக மருத்துவ நன்மைகள் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். வெந்தயம் உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது.
குறிப்பாக நீங்கள் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவராக இருந்தீர்கள் என்றால் நிச்சயம் மருத்துவர்களிடம் கேட்ட பிறகு, வெந்தயத்தை எடுத்துக்கொள்ளலாம்.
வெந்தயத்தில் நார்சத்து, மினரல்ஸ் மற்றும் மற்ற சத்துக்கள் இருக்கின்றன. 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் 20 % இரும்பு சத்து இருக்கிறது. இதில் 7 % மான்கனீஸ் மற்றும் 5 % மெக்னிஷியம். இருக்கிறது.
இந்நிலையில் நாம் வெந்தயத்தை சாப்பிட்டால், வயிறு நிரம்பிவிட்டதுபோல் உணர்வை ஏற்படுத்தும். இதனால் உடல் எடை குறையும். ஜீரண வழித் தடத்தில் ஏற்படும் எரிச்சல் குறைக்கிறது. இதனால் நமது வயிறு மற்றும் குடல் சுவரின் பகுதி பாதுகாக்கப்படும். இதனால், ஆசிட் ஏரிவரும் சிக்கல் ஏற்படாது.
இந்நிலையில் நாம் சாப்பிடும் கொழுப்பு சத்து உள்ள உணவிலிருந்து பேட்டி ஆசிடை அதிகம் எடுத்துக்கொள்ளாது. வெந்தயத்தில் இருக்கும் சப்போனின்ஸ் இதை தடுக்கிறது.
இந்நிலையில் சுன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. இதனால் உடல் இன்சுலினை ஏற்றுக்கொள்ளும் தன்மை அதிகரிக்கும்.
இந்நிலையில் வீக்கத்தை குறைக்கும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் ஆகியவற்றை குணப்படுத்த உதவும். ரத்த சோகை குணப்படுத்த, குழந்தை பிறந்த பின்பு பால் உற்பத்தியாக உதவுகிறது.
1 முதல் 2 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கவும், வெந்தயத்தை சாப்பிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“