பொதுவாக மாரடைப்பு வராமல் தடுக்க வேண்டும் என்றால் ரத்த கொழுப்பு அளவு சரியாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி நல்லா இருக்கணும், மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
மேலும் அதற்கு செம்பருத்திப்பூ டீ உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட சத்துக்கள் நிறைந்த செம்பருத்தி பூ டீ செய்வது பற்றி வீரன் வீடு யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பதாவது,
செம்பருத்தியில் சிகப்பு மீது ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது ரத்த கொழுப்பு, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். எனவே காலையில் டீ காபிக்கு பதிலாக இதை குடிக்கலாம் சத்தாகவும் இருக்கும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அதுமட்டுமின்றி சர்க்கரை நோயாளிகளும் செம்பருத்தி பூ டீ குடிக்கலாம். அவர்களுக்கும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். அவ்வளவு சத்துக்கள் நிறைந்த செம்பருத்தி பூ டீ எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
செம்பருத்தி பூ
இஞ்சி
பட்டை
தேன்
செய்முறை
செம்பருத்தி பூவை எடுத்து அதன் கீழுள்ள அந்த பச்சை இலை மற்றும் நடுவே இருக்கும் காம்பை அகற்றிவிட்டு இலைகளை கழுவி சுத்தம் செய்து கொதிக்க விட வேண்டும்.
செம்பருத்திப் பூ தேனீர்/sembaruthi poo Tea/Hibiscus Tea
பின்னர் அவை கொதித்ததும் அதில் தட்டியை இஞ்சி, பட்டை போட்டு நன்கு கொதிக்க விட்டு வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு தேன் விட்டு தினமும் காலையில் குடித்து வரலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.