உடல் எடையை குறைப்பது என்பது சற்று சவாலான முயற்சிதான். உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு, டயர் எனப் பலவற்றை மேற்கொள்ளவோம். சில சமயம் நாம் சரியாகத்தான் செய்கிறோமா என சந்தேகம் கூடவரும். ஆரோக்கியமான டயர் முறைதான் பாதுகாப்பானது. அந்தவகையில், அதிக புரதம், குறைந்த கலோரி கொண்ட ஆரோக்கியமான உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன என நிபுணர்கள் கூறுகின்றன. 4 ஆரோக்கியமான உணவுகள் பற்றி இங்கு பார்ப்போம்.
வறுத்த காலிஃபிளவர்
காலிஃபிளவரில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கொழுப்பு குறைவாக உள்ளது. காலிஃபிளவர் வறுத்து சாப்பிடுவது
புதிய சுவை தரும். பூண்டு சேர்க்கப்பட்ட தயிர் அல்லது சட்னியுடன் நீங்கள் இதை சாப்பிடலாம்.
முட்டை பொரியல்
முட்டை ஆரோக்கியமான காலை உணவு வகைகளில் ஒன்றாகும். முட்டைகளில் புரதம், வைட்டமின்கள், செலினியம் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. சிறிது எண்ணெய் சேர்த்து, மிளகு, பால், முட்டை சேர்த்து செய்யலாம். காய்கறிகளையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம்.
சாலட்
சிலருக்கு சாலட் பிடிக்காது. காய்கறிகள் வேக வைக்கப்படாமல் பச்சையாக இருப்பதால் பிடிக்காது. ஆனால் இதில் மசாலா, மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டால் அது மிகவும் சுவையாக இருக்கும். சாலட்டில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.
பயிர்கள்
மூங் டால் என அழைக்கப்படும் பாசிப்பயற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது. பசி ஹார்மோனை கட்டுப்படுத்தும் தன்மை பாசிப்பயறு கொண்டுள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த உணவாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“