உலகம் முழுவதும் பல வகையான பழங்கள் கிடைக்கின்றன. நம் தமிழகத்தில் பழங்கள் என்றாலே அது முக்கனிகள் என்று அழைக்கப்படும் மா, பலா, வாழைதான். அதிலும், இந்த பலா பழம் மிகவும் இனிப்பு சுவை மிகுந்தது.
பலா பழத்தில் நிறைய வகைகள் இருக்கிறது. அதிலும் நமது பாரம்பரிய பலாப்பழம் வகை ஒன்று கேன்சரை தடுக்கும் சக்தி கொண்டது என்று மருத்துவர் பிரபு கூறுகிறார்.
ஸ்மார்ட் திரை யூடியூப் சேனலில் பேசியுள்ள டாக்டர் பிரபு, இப்போதெல்லாம் மக்கள் வெளிநாட்டு பழங்களை சாப்பிடுவதில் ஆர்வமாக உள்ளார்கள். ஆனால், நம்முடைய நாட்டில் உள்ள பலாப் பழத்தில் எல்லோரும் வழக்கமாக மஞ்சள் நிறத்தில் இருக்கிற பலாப்பழத்தைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், பலாப் பழத்திலேயே மிகவும் சுவையான வகை கர்நாடகாவில் சித்து என்கிற வகை உள்ளது. இந்த சித்து பலாப்பழத்தின் சுளைகள் செம்பு நிறத்தில் இருக்கும். இந்த பலாப் பழம் ரொம்ப சிறிய அளவில் இருக்கும். அதாவது 250 கிராம் அளவு இருக்கும்.
இது ஏதோ மரபணு மாற்றப்பட்ட பலா வகை இல்லை. இது நமது நாட்டில் பாரம்பரியமாக விளையக்கூடிய பலாப் பழ வகை. இதை இந்திய தோட்டக்கலை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளார்கள். தும்கூர் மாவட்டத்தில் உள்ள பலா வகைகளை சேகரித்து இதனுடைய தனித்தன்மையை அறிந்திருக்கிறார்கள். பலருக்கு இந்த பலா வகையை பயிரிட கொடுத்திருக்கிறார்கள். இந்த பலா வகைக்கு இதை கண்டுபிடித்தவரின் தந்தை பரமேஸ்வரன் சித்தப்பா என்பதில் இருந்து சித்து என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதே போல, பலாப் பழம் வகை கேரளாவிலும் இருக்கிறது.
இந்த செம்பு நிறத்தில் இருக்கும் சித்து என்கிற பாரம்பரிய பலாப்பழ வகையில் ஊட்டசத்து சிறப்பு என்ன வென்றால், இந்த வகை பலாப்பழத்தில் லைகோபி (Lycopin) என்ற கேன்சர் எதிர்ப்பு கூறுகள் கொண்டது. எல்லாவகையான நோய்களையும் கட்டுப்படுத்தக் கூடிய ஆண்டாக்சிடண்ட் (Antoxidant) உள்ளது. இந்த பாரம்பரிய வகை பலாப்பழத்தை சாப்பிட்டால் 100 கிராமில் 2 கிராம் லைகோபின் இருக்கிறது. இந்த அளவுக்கு லைகோபின் கிடைக்கக் கூடிய பழம் வேறு எதுவுமே இல்லை.
பை ராமச்சந்திரா, ராமச்சந்திரா, சித்து போன்ற பாரம்பரிய பலாப்பழ வகைகள் இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ளன. விவசாயிகளும் சித்து போன்ற பாரம்பரிய வகை பலாப் பழங்களை சாகுபடி செய்து பயனடையலாம் என்று டாக்டர் பிரபு தெரிவித்துள்ளர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“