Advertisment

இடுப்பு வலி பறந்து போகும்… இந்த கஞ்சி கிடைச்சா விட்டுறாதீங்க மக்களே!

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் இடுப்புவலி, உடல் சூடு மட்டுமின்றி வயதானவர்களுக்கு வரும் உடல் வலி வரை அனைத்தையும் போக்கும் ஒரே ஒரு கஞ்சி தான் இந்த கருப்பு உளுந்துகஞ்சி. இதை சட்டென்று 5 நிமிடத்தில் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
urad milk

சட்டுன்னு வலியை போக்கும் கருப்பு உளுந்து கஞ்சி

இடுப்பு எலும்பு பலம் பெற, கர்ப்பப்பை வலுப்பெற, உடல் உஷ்ணம் குறைய,  உடலுக்கு குளிர்ச்சியை தருவதற்கு இந்த ஒரு கஞ்சி போதும்.

Advertisment

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து 
கருப்பட்டி அல்லது வெல்லம்
உப்பு
ஏலக்காய் பொடி
சுக்கு பொடி
தேங்காய் பால்

ஒரு கடாயில் ஒரு கப் கருப்பு உளுந்து எடுத்து நல்ல வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் கால் கப் பச்சரிசி எடுத்து வறுக்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் கால் கப் மாவு எடுத்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். எவ்வளவு மாவு எடுத்தோமோ அதில் இரண்டு மடங்கு கருப்பட்டியோ வெல்லமோ எடுத்து காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும்.

எலும்பு பலம் பெற, கர்ப்பப்பை வலுப்பெற இந்த கஞ்சி மட்டுமே போதும்

கரைப்பதற்கு எடுத்த மாவை விட அதற்கு நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி கட்டி விழாமல் கிண்ட வேண்டும். அது கஞ்சி பதத்திற்கு வந்தவுடன் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சுக்கு, ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதில் தேங்காய் பால் சிறிது சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர இடுப்பு வலி, கர்ப்பப்பை பிரச்சனை, மாதவிடாய் கோளாறு நீங்கும். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சாப்பிட்டு வரவே உடல் பலம் பெறும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Reasons to eat urad dal Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment