/indian-express-tamil/media/media_files/2025/06/12/vAGclMQuNu2kPFswrjd1.jpg)
சமையலறையில் நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றான வெண்ணெய், இனி கடைகளில் வாங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயே சுலபமாகத் தயாரிக்கலாம். 'லாவண்யா சமையல் திரை' யூடியூப் சேனலில் வெளியான ஒரு வீடியோ, வீட்டில் வெண்ணெய் தயாரிப்பதற்கான எளிய மற்றும் பயனுள்ள செய்முறையை விரிவாக விளக்குகிறது. எந்தவித சிக்கலான உபகரணங்களும் இல்லாமல், குறைந்த நேரத்தில் சுவையான வெண்ணெயை எப்படி உருவாக்குவது என்பதை பற்றி பார்ப்போம்.
செய்முறை ஒரு சுத்தமான உலோகத் தட்டில், நெய் ஊற்றி அடுத்ததாக, சிறிதளவு ஐஸ் கட்டிகள் சேர்க்கப்படுகின்றன. ஐஸ் கட்டிகள் சேர்க்கப்பட்ட உடனேயே மெதுவாக அழுத்தி, தேய்க்க வேண்டும். இந்த செயல்முறை, திரவத்தில் உள்ள கொழுப்பைத் திரட்டி, அதை திடமான வடிவத்திற்கு மாற்றுகிறது. ஐஸ் கட்டிகளின் குளிர்ச்சி, திரவத்தின் கொழுப்புப் பகுதிகளை விரைவாகப் பிரித்தெடுத்து, வெண்ணெயாக மாற்றத் துணைபுரிகிறது. நெய் படிப்படியாக கெட்டியாகி, ஒரு திடமான நிலைத்தன்மைக்கு வரும்.
எந்தவித செயற்கை சேர்க்கைகளும் இல்லாமல், புதியதாக, சுகாதாரமான முறையில் வெண்ணெயை வீட்டிலேயே தயாரிக்க இது ஒரு சிறந்த முறையாகும்.
வெண்ணெய் வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் E மற்றும் வைட்டமின் K2 போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் (Fat-soluble vitamins) நிறைந்த ஆதாரமாகும்.
வெண்ணெயில் சaturated fat (செறிவூட்டப்பட்ட கொழுப்பு) மற்றும் monounsaturated fat (ஒற்றை நிறைவுறா கொழுப்பு) போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. மிதமான அளவில் எடுத்துக் கொள்ளும்போது, இவை உடலில் ஆற்றலை வழங்கவும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகின்றன.
வெண்ணெய் கொழுப்புச் சத்து நிறைந்தது. இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. கடின உழைப்பு செய்பவர்களுக்கும், எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல சாய்ஸ்.
வெண்ணெயில் ப்யூட்ரிக் அமிலம் (butyric acid) உள்ளது. இது குடலின் ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும் உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.