இந்த டிஷ் அரபு நாட்டுல ரொம்ப பேமஸ்... நம்ம ஊரு ஸ்டைலில் இப்படி செய்யுங்க: செஃப் வெங்கடேஷ் பட் டிப்ஸ்
பன்னீர் ஷவர்மா என்பது மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமான உணவு. டேஸ்டியான பன்னீர் ஷவர்மாவை பிரபல சமையல் கலைஞரான செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் சேனலில் செய்முறை விளக்கங்களுடன் பகிர்ந்துள்ளார்.
பன்னீர் ஷவர்மா என்பது மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமான உணவு. டேஸ்டியான பன்னீர் ஷவர்மாவை பிரபல சமையல் கலைஞரான செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் சேனலில் செய்முறை விளக்கங்களுடன் பகிர்ந்துள்ளார்.
பன்னீர் ஷவர்மா என்பது மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமான உணவு. இதில், இறைச்சிக்கு பதிலாக பாலாடைக் கட்டியான பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த டேஸ்டியான பன்னீர் ஷவர்மாவை பிரபல சமையல் கலைஞரான செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் சேனலில் செய்முறை விளக்கங்களுடன் பகிர்ந்துள்ளார்.
பன்னீர் மேரினேட்: 20 பூண்டு, 4 பச்சைமிளகாய், 30 கிராம் இஞ்சி போட்டு மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்க வேண்டும். 6 க்யூப்ஐஸ் கட்டிகள் எடுத்து, அதனுடன் 3 ஸ்பூன் வறுத்த வெள்ளை எள் சேர்த்து, 5 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 10 பல் பூண்டு, ஒரு எலுமிச்சை பழம் சாறு சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தஹினி ரெடி. அடுத்ததாக ஒரு பவுலில் 4 கரண்டி தயிர் எடுத்து நன்கு கடைந்து கொள்ளவும். அதனுடன் கஸ்தூரி மேத்தி, அரை ஸ்பூன் தன்யா தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும். அதனுடன், அரைத்து வைத்துள்ள பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி பேஸ்டை சேர்த்து நன்கு கிளற வேண்டும். மேரினேட் ரெடி.
அடுத்ததாக பாலாடைக்கட்டியை மெல்லிய துண்டுகளாக அதிக கனமும் இல்லாமல் மெதுவாக இல்லாமல் போன்ற பதத்தில் வெட்டிக் கொள்ளவும். பன்னீரை தயாரித்து வைக்கப்பட்டுள்ள மேரினேட்டில் போட்டு 15 நிமிடம் ஊர வைக்க வேண்டும். அடுத்து, தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, பன்னீர் மேரினேட்-ஐ போட்டு கடலை எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதனை சிறுசிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். தேவைப்பட்டால், மேலும் எண்ணெய் சேர்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து அதனை மற்றொரு பவுலில் மாற்ற வேண்டும். அடுத்து, தோசைக் கல்லில் பட்டர் சேர்த்து மைதா சப்பாத்தி அல்லது பரோட்டா கல்லின் மேல் வைத்து சூடு பண்ன வேண்டும்.
சூடு செய்த பரோட்டா மேல் ரெடி பண்ணி வைத்துள்ள தஹினி சேர்த்து அதன் மேல் வெங்காய், குடைமிளகாய், தக்காளி, பன்னீர் சேர்த்து ரோல் செய்ய வேண்டும். அவ்வளவுதான் டேஸ்டியான பன்னீர் ஷவர்மா ரெடி.!