வெயில் காலம் என்றால் உடல் வரட்சி, அதிக சோர்வு, மயக்கம் மற்றும் வெயில் படுவதால் தோல் நிறத்தில் மாற்றம் ஏற்படும். இதிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முக்கியமான விஷயங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கார்டன் அதாவது பருத்திலான ஆடைகள் உடுத்த வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்லாமல் இருப்பது. இந்நிலையில் உடலில் உள்ள பொட்டாஷியம், சோடியம் சத்துக்கள் வெயில் காலத்தில் இழக்ககூடும். மேலும் செரிமாணம், சருமம், வைரஸ் தொற்று( காய்ச்சல்) மற்றும் சிறுநீர் கழிப்பதில் உள்ளிட்டவை தொடர்பான சிக்கல் ஏற்படும் இந்நிலையில் இதற்கு வீட்டில் செய்யும் கை வைதியத்தில் தீர்வு காண முடியும்.
உங்களுக்கு அஜீரணம் ஏற்பட்டால் வீட்டில் இருக்கும் கிராம்பு சிலவற்றை வாயில் போட்டு கடித்து சாப்பிடவும். மேலும் இதன் எண்ணெய் அஜீரணத்தை குறைக்க உதவும்.
நீங்கள் வரட்டு இருமலில், தவித்தால் இதை செய்ய வேண்டும். 6 பேரிச்சம்பழத்தை, ½ அளவு பாலில், 25 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். பால் ¼ அளவுக்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும். இதை மூன்று வேளைகளும் சாப்பிட வேண்டும்.
ஒற்றை தலைவலி தாங்க முடியவில்லை என்றால் இதை செய்யுங்கள். காலையில் வெறும் வயிற்றில் ஆப்பில் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் ஒற்றை தலைவலி ஏற்படுத்தும் கடுமையான வலி நீங்கும்.
இந்நிலையில் வெயில் காலத்தில் சருமம் தொடர்பான முகப்பரு ஏற்பட்டால் , வெள்ளரிக்காய்களை துருவி முகம், கழுத்தில் போட வேண்டும்.
வெயில் காலத்தில் ஏற்படும் தலைவலிக்கு, நிவாரணம் கொடுக்க, ஒரு கிளாஸ் தர்பூசணி ஜூஸ் குடிக்கலாம்.
துளசியில் அண்டாசிட், தன்மை இருக்கிறது. இதனால் துளசி இலைகளை சாப்பிட வேண்டும். நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க உடலுக்கு உதவுகிறது.