எண்ணெய் இல்லாமல் சீரகம் வறுத்து... பி.பி குறைய ஈசி வழி இது: டாக்டர் சந்தோஷிமா
உயர் இரத்த அழுத்தத்தை வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் சந்தோஷிமா விளக்கம் அளித்துள்ளார். இதனை பின்பற்றி உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
உயர் இரத்த அழுத்தத்தை வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் சந்தோஷிமா விளக்கம் அளித்துள்ளார். இதனை பின்பற்றி உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இன்றைய சூழலில் பலரும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வயது பேதமின்றி இளைஞர்களுக்கும் கூட இந்த பிரச்சனை இருக்கிறது. உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், பணிச்சூழல் போன்றவற்றால் இது ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Advertisment
இந்த பிரச்சனையை கட்டுப்படுத்துவதற்கு நீண்ட நாட்களாக பலரும் மருந்துகள் எடுத்துக் கொள்கின்றனர். எனினும், வீட்டு வைத்திய முறையில் இவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் சந்தோஷிமா பரிந்துரைத்துள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினசரி காலை நேரத்தில் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறுடன், கால் ஸ்பூன் முதல் அரை ஸ்பூன் வரை பட்டை பொடி மற்றும் இரண்டு சிட்டிகை சுத்தமான விரலி மஞ்சள் பொடி சேர்த்து குடிக்கலாம் என்று மருத்துவர் சந்தோஷிமா தெரிவித்துள்ளார்.
இதேபோல், மற்றொரு வீட்டு வைத்திய முறையையும் பின்பற்றலாம் என்று அவர் கூறுகிறார். அதன்படி, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து எண்ணெய் சேர்க்காமல் சீரகம் மட்டும் போட்டு வறுக்க வேண்டும். பின்னர், இதனை பொடியாக அரைக்க வேண்டும். இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து தேன் அல்லது சுடுதண்ணீரில் கலந்து தினசரி காலை நேரத்தில் குடிக்கலாம்.
Advertisment
Advertisements
இவற்றில் இருக்கும் அன்டி ஹைப்பர்டென்சிவ் தன்மை, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் என்று மருத்துவர் சந்தோஷிமா தெரிவித்துள்ளார். எனவே, இவற்றை தினசரி பின்பற்றலாம் என்று அவர் வலியுறுத்துகிறார்.
நன்றி - Madhavas Siddha Ayurveda Clinic Dr. Santhoshima Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.