/indian-express-tamil/media/media_files/2025/05/03/uZLXeYemyWUIWk8Z9Bhu.jpg)
சரியான முறையில் மலம் கழிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்று மருத்துவர் சிவராமன் விளக்குகிறார். இதன் பாதிப்புகள் மற்றும் வீட்டு வைத்திய முறைகள் குறித்து தமிழ் ஸ்பீச் பாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலையில் மலம் கழிக்க சிரமமாக இருப்பது மலச்சிக்கலின் அறிகுறியாகும். சரியாக மலம் கழிக்காவிட்டால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். காபி, புகைபிடித்தல் அல்லது மலமிளக்கிகள் போன்ற செயற்கை முறைகளை மலம் கழிக்க பயன்படுத்துவதும் மலச்சிக்கலின் மற்றொரு நிலை என்று அறியப்படுகிறது.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் வலி, மலம் கழிக்க தயக்கம் மற்றும் பசியின்மை ஏற்படும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில், 4-5 உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து மசித்து இரவில் கொடுக்க வேண்டும்.
4-5 வயது குழந்தைகளுக்கு, கால் ஸ்பூன் வறுத்த கடுக்காய் பொடியை கொடுக்கலாம். உலர்ந்த இஞ்சி மற்றும் கொத்தமல்லி கஷாயத்தை வெல்லத்துடன் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை கொடுக்கலாம்.
இது தவிர, காலையில் வாழைப்பழம் கொடுப்பது செரிமானத்தை சீராக்கும். குழந்தைகள் விளையாட்டில் மூழ்கி தண்ணீர் குடிக்க மறந்துவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு போதுமான தண்ணீர் கொடுக்க வேண்டும்.
மேலும், 65-70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அவர்கள், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதேபோல், அரை டீஸ்பூன் நிலவாகை பொடியை இரவில் சாப்பிடலாம். கூடுதலாக, செரிமானத்தை மேம்படுத்தும் உணவுகளை உண்ண வேண்டும்.
மலச்சிக்கலை கவனிக்காமல் விட்டால் பசியின்மை, மூலம் மற்றும் ஆசனவாய் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இதனை சரியாக கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். குறிப்பாக, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மலமிளக்கிகள் அல்லது மருந்துகளை உட்கொள்ளக்கூடாது என சிவராமன் அறிவுறுத்துகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.