சளி தொல்லையால் அவதி படுகிறீர்களா இதோ உங்களுக்கான தீர்வு. வெறும் 5 நிமிடத்தில் வீட்டில் சட்டென செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு
மிளகு
சீரகம்
பூண்டு
காய்ந்த மிளகாய்
தக்காளி
கருவேப்பிலை
கொத்தமல்லிதழை
சின்ன வெங்காயம்
எண்ணெய்
கடுகு
கொள்ளு, மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லிதழை ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்து அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றவும். அதனுடன் புளி கரைசலையும் சேர்த்து நன்கு கலந்து விடவும். புளி மிக்ஸியில் நன்கு அரையும் என்றால் அதிலேயே சேர்த்து விடலாம் இல்லை என்றால் புளி கரைசலை சேர்க்கலாம்.
அந்த கரைசலில் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்த பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு நன்கு தாளித்து விடவும். பின்னர் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் நீங்கி நன்கு வதங்குவதற்கு சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் 5 நிமிடம் களித்து அது நன்கு வதங்கியவுடன் பாத்திரத்தில் வைத்துள்ள கரைசலை ஊற்றி உப்பு காரம் சரி பார்த்து மேலே சிறிது நறுக்கிய கொத்தமல்லிதழையை தூவி ஒரு கொதி விட்டு இறக்கினால் கொள்ளு ரசம் ரெடியாகி விடும்.
ஒரு கப்பில் சாதம் எடுத்து அதை நன்கு பிசைந்து அதனுடன் இந்த கொள்ளு ரசத்தை சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சில் தங்கி இருக்கும் சளி இலகி வெளியேறிவிடும். நீண்ட நாள் சளி இருப்பவர்கள், அவ்வப்போது சளி பிடிப்பவர்கள் வாரத்தில் 2 மூன்று முறை இதேபோல் கொள்ளு ரசம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“