உடம்புல கொழுப்பு கட்டி? தேனுடன் இந்த பவுடர் சேர்த்து சாப்பிடுங்க: டாக்டர் நித்யா

உடலில் தோன்றக் கூடிய கொழுப்பு கட்டிகளை வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு குணப்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடலில் தோன்றக் கூடிய கொழுப்பு கட்டிகளை வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு குணப்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Lipoma home remedy

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அவை கட்டிகளாக மாறும் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது போன்ற கட்டிகளை வீட்டு வைத்திய முறையில், உணவு வழக்கங்களை சீரமைத்து குணப்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதற்காக நார்ச்சத்து மற்றும் அன்டி ஆக்சிடென்ட்ஸ் இருக்கும் உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உடலில் இருக்கும் கட்டிகளை கரைத்து வெளியேற்றி விடும் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். அதன்படி, கத்தரிக்காய், கொத்தவரங்காய், முருங்கை பிஞ்சு போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.

இது தவிர மூலிகைகள் அடங்கிய பொடியையும் கொழுப்பு கட்டிகளை கரைக்கும் மருந்தாக பயன்படுத்தலாம். அதன்படி, வேப்பமரப்பட்டை, மஞ்சள் கிழங்கின் பொடி, நாவல் மரப்பட்டை, கொடிவேலி வேர், பூனைக்காலி விதைகள், இண்டு மூலிகை மற்றும் சீந்தில் ஆகிய அனைத்தையும் பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பொடியை தினசரி தேனில் கலந்து சாப்பிட்டால் கொழுப்புக் கட்டி கரையும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, காலை மற்றும் இரவு என இரண்டு வேளையும் இதனை சாப்பிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர அதிகமாக எண்ணெய் மற்றும் கொழுப்பு சேர்ந்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்று கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

இவை அனைத்தையும் தொடர்ச்சியாக பின்பற்றினால் உடலில் ஏற்படக் கூடிய கொழுப்பு கட்டிகளை எளிதாக கரைத்து விடலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். எனினும், இதற்காக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருபவர்கள், உரிய ஆலோசனையுடன் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

நன்றி - Dr.Nithya's Varam Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Home Remedy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: