வாரத்திற்கு 2 நாள் இந்த கசாயம்... தீராத சளித் தொல்லைக்கு பை சொல்லுங்க: மருத்துவர் சிவராமன்
சளி தொல்லை இருப்பவர்கள் மேற்கொள்ளக் கூடிய வீட்டு வைத்திய முறையை மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். குறிப்பாக, இதனை வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சளி தொல்லை இருப்பவர்கள் மேற்கொள்ளக் கூடிய வீட்டு வைத்திய முறையை மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். குறிப்பாக, இதனை வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை இருக்கும். இது தவிர சில பெரியவர்களுக்கு மாதத்திற்கு ஒரு முறையாவது சளி பிடிக்கும். இது போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வருவதால் நம் அன்றாட வேலையை செய்வதில் சிரமம் ஏற்படும்.
Advertisment
இது தவிர சளி பிரச்சனைக்கு மருந்துகள் சாப்பிட்டாலும், அவை அந்த நேரத்தில் மட்டும் நிவாரணம் அளிப்பதை போன்று தோன்றும். ஆனால், அந்த மருந்தின் வீரியம் குறைந்ததும் மீண்டும் அவை வேலையை காட்டத் தொடங்கும். இதற்கு சரியான தீர்வு இருக்கிறதா என்று பலரும் சிந்தித்து இருப்பார்கள்.
அந்த வகையில், இத்தகைய பிரச்சனையை எளிமையான வீட்டு வைத்திய முறையில் சரி செய்யலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதற்கு ஏற்ற மருந்தை தயாரித்து எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வாரத்திற்கு இரண்டு முறை வெறும் சுக்கு மற்றும் மிளகை சேர்த்து கசாயம் வைத்து குடிக்கலாம். இதில் வெல்லம் அல்லது தேன் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது, நெஞ்சில் கபம் சேரக் கூடிய தன்மை குறையத் தொடங்கும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
இந்த மருந்து சளி பிரச்சனைக்கு தீர்வளிப்பதுடன் மூச்சுக் குழாய் பகுதியில் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுகிறது. எனவே, இயற்கையான முறையில் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் இதனை பரிசீலிக்கலாம்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.