குளிர்ச்சியான உணவு பொருட்களை சாப்பிட்டாலோ அல்லது மழைக் காலங்களிலோ பலருக்கு தும்மல் பிரச்சனை இருக்கும். இவை சீசன் மாறினால் சரியாகி விடும். ஆனால், பலருக்கு காலை எழுந்ததும் தொடர்ச்சியாக தும்மல் வந்து கொண்டே இருக்கும்.
இதற்கான காரணம் மற்றும் வீட்டு வைத்தியம் பற்றி மருத்துவர் யோகவித்யா எத்னிக்ஹெல்த்கேர் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அடுக்கு தும்மலுக்கு ஒவ்வாமை மிக முக்கிய காரணமாக இருப்பதாக கூறுகிறார்.
தூசிகளால் அல்லது இயற்கையாகவே இந்த ஒவ்வாமையால் தொடர் தும்மல் வந்து பலர் அவதிக்குள்ளாகின்றனர். இதனை ஒரு நோயாக கருதாவிட்டாலும், தொடர் தும்மலால் உடல் சோர்வு ஏற்படும்.
உங்களுக்கு அடிக்கடி தும்மல் வருமா? உடனடி நிவாரணம் ! Stop Sneezing | Home Remedies | #sneeze
இதனை வீட்டு வைத்திய முறை மூலமாக குணப்படுத்த முடியும் என்று டாக்டர் யோகவித்யா கூறுகிறார். மருந்துகள் இல்லாம்ல வீட்டு வைத்தியம் வாயிலாக இதற்கு தீர்வு காண முடியும் என்கிறார்.
அதற்கு ஒரு கிளாஸ் சுடுதண்ணீரில், தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தினசரி காலை பருக வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தும்மல் பிரச்சனை முற்றிலும் நீங்கி விடும் என்கிறார். அதேபோல், எலுமிச்சை மூலம் வைட்டமின் சி சத்தும் நம் உடலுக்கு எளிதாக கிடைத்து விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.