6 எலுமிச்சை, 30 பூண்டு பல்... ரத்தக் குழாய் அடைப்பை சரி செய்ய இதை நோட் பண்ணுங்க: டாக்டர் ராஜலட்சுமி
இரத்தக் குழாய் அடைப்பை சரி செய்வதற்கு பூண்டு எவ்வாறு பயன்படுகிறது என்று மருத்துவர் ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதனை பயன்படுத்தும் முறை குறித்தும் அவர் கூறியுள்ளார்.
இரத்தக் குழாய் அடைப்பை சரி செய்வதற்கு பூண்டு எவ்வாறு பயன்படுகிறது என்று மருத்துவர் ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதனை பயன்படுத்தும் முறை குறித்தும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய சூழலில் பலரும் இரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தொடர்ந்து மருந்து சாப்பிடும் நிலையில் நிறைய பேர் இருக்கின்றனர். அந்த வகையில், இந்த பிரச்சனையை சரி செய்ய பூண்டு எவ்வாறு உதவுகிறது என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
Advertisment
பூண்டில் அலிசின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இதன் மூலம் கந்தகச் சத்து கிடைக்கிறது என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். கொழுப்பை குறைத்து, இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த அலிசின் பயன்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம் உணவின் ஒரு பகுதியாக பூண்டு அமைகிறது. இதனால், பூண்டை தினசரி எடுத்துக் கொண்டால் பிரச்சனை ஏற்படாது. மேலும், பூண்டில் வைட்டமின் பி1, பி2 மற்றும் பி3 ஆகியவை அதிகமாக இருக்கிறது. இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த பூண்டை சாப்பிடுவதற்கு சில முறைகள் இருக்கிறது.
அதன்படி, பூண்டை 20 நாட்களுக்கு தொடர்ந்து தேனில் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், தினசரி காலை நேரத்தில் 5 பல் பூண்டு சாப்பிடலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். எனினும், அந்த தேனை எடுக்காமல் பூண்டை மட்டுமே சாப்பிட வேண்டும். இது மூட்டு வலி இருப்பவர்களுக்கு நல்ல மருந்தாக செயல்படும்.
Advertisment
Advertisements
இது தவிர 6 எலுமிச்சை பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் 30 பல் பூண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை மூழ்கும் அளவிற்கு சுடுதண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
மறுபுறம், மூன்றரை லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீர் ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்திருந்த பூண்டு மற்றும் எலுமிச்சை பழங்களை இதில் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் கிளற வேண்டும். அதன் பின்னர், இதனை ஒரு மணி நேரத்திற்கு ஆற வைக்க வேண்டும்.
இறுதியாக இதனை வெள்ளைத் துணியில் வடிகட்டி எடுக்க வேண்டும். இப்படி செய்யும் போது 3 லிட்டர் அளவில் தண்ணீர் கிடைக்கும். இதனை தினசரி காலை வெறும் வயிற்றில் 250 மில்லி லிட்டர் அளவில் குடிக்க வேண்டும். இத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு குடிக்க வேண்டும்.
இப்படி செய்யும் போது இரத்த அடைப்பு சரி செய்யப்படும் என்று மருத்துவர் ராஜலட்சுமி அறிவுறுத்துகிறார்.
நன்றி - ASM INFO Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.