கடைகளில் பிஸ்கட் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். இனி யாரும் அந்த தவறை செய்ய வேண்டாம். அதற்கு மாறாக இனி வீட்டிலேயே இந்த பிஸ்கட்களை எளிதில் செய்யலாம்.
அப்படி மொறு மொறு வென்று ஹெல்தியான கோதுமை பிஸ்கட் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதை ராகி, மைதாவிலும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 டம்ளர்
தூளாக்கப்பட்ட சர்க்கரை - 1 டம்ளர்
உப்பு
உருக்கிய பட்டர்
எண்ணெய்
முந்திரி
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
ஒரு இட்லி சட்டியில் கல் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் சூடு படுத்தவும். பின்னர் ஒரு பவுலில் இரண்டு டம்ளர் கோதுமை மாவு, தூளாக்கப்பட்ட சர்க்கரை ஒரு டம்ளர், உருக்கிய பட்டர், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
அனைத்தையும் மாவு பதத்திற்கு மெதுவாக பிசைந்து அதில் சிறிது பாதாம் பருப்புகளையும் சேர்த்து பிசையவு.
உங்கள் வீட்டு இட்லி தட்டில் Easy-ஆ செய்யலாம் Tasty பிஸ்கட் | SivaRaman Kitchen
சிறிது சிறிதாக உருண்டை பிடித்து வட்டமாக பிஸ்கட் வடிவில் திரட்டி எடுக்கவும். இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி அதன்மேல் இந்த பிஸ்கட்டுகளை வைத்து வேகவிட்டு எடுத்தால் மொறு மொறுவென்று பட்டர் பிஸ்கட் வீட்டிலேயே ரெடியாகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“