தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 3/4 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
பூண்டு - 6 பல்
காய்ந்த சிவப்பு குண்டு மிளகாய் - 6
காய்ந்த காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 2
கருப்பு மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காய தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் பூண்டை தோலுடன் சேர்த்து லேசாக நுணுக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் நசுக்கிய பூண்டு மற்றும் 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி வறுக்கவும். பிறகு அதே கடாயில் துவரம் பருப்பு, சீரகம் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
துவரம் பருப்பு ஓரளவு வறுபட்டவுடன் காய்ந்த சிவப்பு குண்டு மிளகாய், காய்ந்த காஷ்மீரி சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பின்னர் அதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் வறுத்து வைத்துள்ள பூண்டு, பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஆறவிடவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக மைய அரைத்து எடுத்தால் ஆந்திர ஸ்டைல் பூண்டு பருப்பு பொடி ரெடியாகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“