5 கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து... சாஃப்ட் இட்லிக்கு இது கேரண்டி!
எவ்வளவு சுவையான சட்னி, சாம்பார் வைத்தாலும், இட்லி மென்மையாக இல்லையென்றால், சாப்பிடுவதற்கு அவ்வளவு திருப்தியாக இருக்காது. பஞ்சு போன்ற மென்மையான இட்லிகளை வீட்டிலேயே தயாரிக்க சில கச்சிதமான அளவுகளும், குறிப்புகளும் அவசியம்.

Advertisment
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி 5 கப், உளுத்தம்பருப்பு 1 கப், வெந்தயம் 1 டீஸ்பூன், உப்பு 3 டேபிள்ஸ்பூன்
மாவு அரைக்கும் முறை:
Advertisment
Advertisements
5 கப் இட்லி அரிசியை நன்கு கழுவி, 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதே கப் அளவில், 1 கப் உளுத்தம்பருப்புடன் 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு கழுவவும். இதை 4 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து ஊறவைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் ஊறவைப்பதால் மாவு நன்றாகப் பொங்கி வரும். ஊறிய அரிசியை கிரைண்டரில் சேர்த்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். மாவு மிகவும் வழுவழுப்பாக இல்லாமல், கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஃபிரிட்ஜில் வைத்திருந்த உளுத்தம்பருப்பை கிரைண்டரில் சேர்க்கவும். உடனே தண்ணீர் ஊற்றாமல், உளுந்து ஊறியிருந்த அந்த குளிர்ந்த தண்ணீரையே சிறிது சிறிதாக ஊற்றி அரைக்க வேண்டும். மாவு அரைபட அரைபட ஊற்றினால், மாவு நன்கு பந்து பந்தாகப் பொங்கி வரும். உளுந்து மாவை எடுத்துப் போடும்போது, அது ஊற்றாமல், பந்து பந்தாக விழ வேண்டும். அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவைச் சேர்த்து, 3 டேபிள்ஸ்பூன் உப்பு போட்டு, கையை வைத்து நன்கு அடித்துக் கலக்க வேண்டும். சுமார் 5 மணி நேரம் மாவை புளிக்க விட வேண்டும். மாவு நன்கு புளித்து, பொங்கி வரும்.
மாவு அரைப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல இட்லி ஊற்றும்போதும் சில குறிப்புகளைப் பின்பற்றினால், சரியான இட்லியைப் பெற முடியும். இட்லி பானையில் தண்ணீர் நன்கு கொதித்த பிறகுதான் இட்லியை ஊற்ற வேண்டும். இட்லி ரொம்ப நேரம் வேகக் கூடாது. அதிக தீயில் (High Flame) 7 நிமிடங்கள் குறைந்த அல்லது மிதமான தீயில் (Low to Medium Flame) 3 நிமிடங்கள் வேக வைக்கலாம். ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த சில்லென்ற மாவை ஊற்றினால், கூடுதலாக 2 நிமிடங்கள் வேகவைக்கலாம். இந்த மாவை வைத்து, சாஃப்டான இட்லி மட்டுமல்லாமல், மொறுமொறுப்பான தோசை, கல் தோசை, பணியாரம் எனப் பல வகையான பலகாரங்களையும் செய்யலாம்.