scorecardresearch

தொப்பைய குறைக்க ரொம்ப கஷ்டபடுறீங்களா? இது உங்களுக்கு கண்டிப்பா உதவலாம்

உடல் எடை குறைப்பது சிக்கலான விஷயம்தான். இதில் மிகவும் சவாலானது வயிற்றுப் பகுதி கொழுப்பை குறைப்பதுதான். இந்நிலையில் உடல் எடையை குறைப்பதில் தேன் மற்றும் பட்டைக்கு அதிக பங்கு இருக்கிறது.

தேன்

தேனில்,  அடிக்கடி பசி எடுக்கும் தன்மையை குறைக்கும் ஆற்றல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இது வயிற்று கொழுப்பை குறைக்கும்.  மேலும் இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் சத்துக்கள் உடல் எடை குறைக்க உதவுகிறது.

பட்டை

பட்டை உடல் எடை குறைப்பதிலும், ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்குவதிலும் உதவுகிறது. மேலும் பட்டை தண்ணீர்  நமது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் பட்டை, தேன், தண்ணீர் சேர்ந்தால் வயிற்றுப் பகுதி கொழுப்பை குறைக்க உதவுகிறது.

தேன் மற்றும் பட்டை தண்ணீர் எப்படி செய்வது?

ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் பட்டை அல்லது பட்டை பொடி சேர்க்கவும். இதன் அளவு பாதி ஆனதும். அதை வடிகட்டவும். கொஞ்சம் சுடு ஆறியதும், அதில் தேன் கலக்க வேண்டும். இதில் எலுமிச்சை சாறை நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Honey and cinnamon water water for belly fat loss