பேக்கரி கடைகளில் கிடைக்கும் ஹனி கேக் வீட்டிலேயே முட்டை சேர்க்காமல் எப்படி செய்வது என்று பார்ப்போம். இது குழந்தைகளுக்கு சத்தாகவும் சுவையான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா
கன்டென்ஸ்டு மில்க்
வனஸ்பதி அல்லது சூரியகாந்தி எண்ணெய்
எலுமிச்சை சாறு
தூள் சர்க்கரை
பேக்கிங் பவுடர்
பேக்கிங் சோடா
வெண்ணிலா எசன்ஸ்
தேன்
மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்
உதிர்ந்த தேங்காய்
செய்முறை
மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவை நன்கு கலந்து சமமாக கலக்கவும்.
மற்றொரு கிண்ணத்தில் கண்டன்ஸ்டு மில்க், எலுமிச்சை சாறு, எண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.
இரண்டையும் நன்றாக கலந்து ஒரு கப்பில் மாற்றி குக்கரில் வைத்து வேகவைக்கவும். 30 நிமிடங்கள் ஒரு குச்சியால் குத்தி பார்க்கவும். மாவு குச்சியில் ஒட்டாமல் இருக்க வேண்டும். பின்னர் வெளியே எடுத்து ஆற விடவும்.
இதற்கிடையில், சர்க்கரை மற்றும் தண்ணீரை கொதிக்க வைத்து சர்க்கரை பாகு தயாரிக்கவும். அதில் சிறிது தேன் கலந்து விடவும். ஒரு பாத்திரத்தில் ஜாம் மற்றும் சர்க்கரையை வைத்து நன்கு உருகும் வரை மிதமான சூட்டில் கிளறிவிடவும்.
குக்கரில் முட்டை இல்லாமல் ஈஸியான ஹனி கேக்| Honey Cake in Tamil | eggless honey cake in cooker
பின்னர் கேக்கின் தட்டையான மேற்பரப்பில், தயாரிக்கப்பட்ட பாகை ஊற்றி ஜாமையும் ஊற்றி உலர்ந்த தேங்காய் துருவலை தூவி விட்டு கேக்கை வெட்டி சாப்பிட தொடங்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“