/tamil-ie/media/media_files/uploads/2022/07/closeup-jar-honey-hands-women-75371486.jpg)
உடல் ஆரோக்கியத்தை பெண்கள் இருப்பது தற்காலத்தில் கடினமான ஒன்றாக இருக்கிறது. வீட்டு வேலை மற்றும் அலுவலகப் பணி என்று இரண்டையும் சமமாக செய்ய வேண்டும் என்ற நிலையில் பெண்கள் இருப்பதால், உடல் ஆரோக்கியத்தை அவர்கள் கவனித்து கொள்ள அவசியமாகிறது.
இந்நிலையில் அந்த காலத்தில் இருந்தே, பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேன் பயன்பட்டு வருகிறது. மாதவிடாய் காலங்களில் வலி, மனச் சோர்வு, மனநிலை மாற்றம் என்று பல சிக்கலை பெண்கள் கடந்து வருகின்றனர். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின்ஸ், மினரல்ஸ் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. தொண்டை புகைச்சல், சளி, காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. இதில் இருக்கும் கார்சினோஜெனிக் கூறு, புற்று நோய் வரவிடாமல் தடுக்கிறது.
மாதவிடாய் வலியை போக்க சுடு நீரில் தேன் கலந்து குடிக்க வேண்டும் அத்துடன் இஞ்சி சாறையும் சேர்த்துகொள்ளலாம். மேலும் ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்படும் சீரற்ற தன்மையை தினமும் தேன் சாப்பிட்டால் சரி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மன நல மாற்றஙகளை கட்டுபடுத்தி, சீராக ஹார்மோன்கள் சுரப்பதை பார்த்துகொள்கிறது.
அதுபோலவே, வயதை குறைத்து காட்ட தேன் உதவுகிறது. தேன், தயிர், கடலை மாவு ஆகியவற்றை கலந்து முகத்தில் பயன்படுத்தினால், பொலிவான சருமம் கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.