பலரும் இனிப்பான உணவுப் பொருள் என்றாலே அதை ஒதுக்கி வைக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். தேன் கூட இனிப்பானதுதான். ஆனால், அதில் சர்க்கரைக்கு பதிலாக, தேனில் ஆரோக்கியமான வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன. அதே நேரத்தில், தேன் மிதமாக சாப்பிட்டால், உடல் எடையைக் குறைகக்கவும் உதவும்.
அமெரிக்க ஊட்டச்சத்து கல்லூரி ஆராய்ச்சியின் படி, தேன் பசியை அடக்க உதவுகிறது. படுக்கைக்கு முன் தொடர்ந்து உட்கொள்ளும் போது, தூங்கும்போது சில மணிநேரங்களில் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். தேன் போன்ற பிரக்டோஸ் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் அதிக கொழுப்பை எரிக்கிறார்கள் மற்றும் அதிக அளவு சகிப்புத்தன்மையைக் கொண்டிருப்பதையும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. தேன் கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியைத் தூண்டுகிறது. கொழுப்பை எரிக்கும் இரசாயனங்களை உருவாக்க மூளையை கட்டாயப்படுத்துவதன் மூலம், இந்த குளுக்கோஸ் மூளையின் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது.
உங்கள் எடையைக் குறைக்கும் உணவில் தேனை உட்கொள்வதற்கு சில ஆரோக்கியமான வழிகள் இங்கே தருகிறோம்.
தேன் லெமன் வாட்டர்
தேன் லெமன் வாட்ட செய்வது எளிதானது. ஒரு கிளாஸ் தண்ணீர், சிறிது தேன், ஒரு எலுமிச்சை துண்டு எடுத்துக்கொள்ளுங்க்ள். தண்ணீரில் தேன், எலுமிச்சையை சேர்த்து தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால் அதிக கொழுப்பு எரியும். கூடுதலாக, எலுமிச்சை உங்களை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிப்பதற்கும், உடல் எடையை குறைக்கவும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் பாரம்பரிய மூலிகை மருந்துகளில் ஒன்று பூண்டு மற்றும் தேன் கலவை. இரண்டுமே இயற்கையான பொருட்கள். அவை உடலில் சாதகமான தாக்கங்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேன் பூண்டு தண்ணீர்
பூண்டு மிகவும் காரமாக இருக்கும். அதை பச்சையாக சாப்பிடுவது கடினமாக இருக்கும். இருப்பினும், சிறிது தேனைச் சேர்ப்பதன் மூலம் எளிதாக சாப்பிடலாம். தேன், பூண்டு இரண்டையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
தேன் இலவங்கப்பட்டை நீர்
இலவங்கப்பட்டை அதன் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இலவங்கப்பட்டை பட்டையிலிருந்து வரும் மசாலா, பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படலாம். எடை குறைப்புக்கு இலவங்கப்பட்டை மற்றும் தேனைப் பயன்படுத்துவது உங்கள் ஃபிட்னஸை மெயிண்டெயின் பண்ணலாம். உங்கள் தினசரி கப் கிரீன் டீயில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை சேர்த்துக்கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"