கொள்ளு சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. கொள்ளு உணவில் சேர்ப்பது ரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. கொள்ளு துவையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு – கால் கப்
தேங்காய் – கால் மூடி
சிவப்பு மிளகாய் – 5
பூண்டு – 4 பல்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் கடாய் வைத்து கொள்ளு பருப்பை சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். தேங்காய் துருவி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் கொள்ளு துவையல் தயார். கொள்ளில் ஏராளமான நன்மைகள் உள்ளதால் அதை வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொள்ளு ரசமும் வைத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“