பல வகையான சிறுதானியங்கள் நமது நாட்டில் அதிகம் விளைவிக்கப்பட்டு மக்களால் உண்ணப்படுகின்றன. அதில் மிகப் பிரபலமான ஒரு சிறுதானியம் கொள்ளு. இந்தக் கொள்ளு பெரும்பாலும் குதிரைகளுக்கு உணவாக கொடுக்கப்படுவது என்பதே பலரும் அறிவார்கள்.
ஆனால், மருத்துவ குணங்கள் நிறைந்த கொள்ளு மனிதர்கள் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதேமாதிரி தான் பெண்களுக்கும் கொள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி டாக்டர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
கொள்ளுப் பருப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்தினால், ஜலதோஷம், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய் போன்றவற்றை குணமாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, உடலில் ஊளைச்சதையை குறைக்க விரும்பினால் அதை கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்நீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
உடல்எடை குறைய கொள்ளு உணவுகள் HorseGram benefits in tamil கொள்ளு இத்தனை நோய்களை தடுக்குமா? Dr.Mythili
அதுமட்டுமின்றி பெண்களுக்கு இருக்கும் பிசிஓடி பிரச்சனை, மாதவிடாய் பிரச்சனை மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும். அதேபோல ஆண்களுக்கும் மலட்டுத்தன்மையை குணமாக்கும்.
கொள்ளு பருப்பை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம் வைக்கும் போது சிறிது பயன்படுத்தலாம். சிலருக்கு வாயுத்தொல்லையால் வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் கொள்ளு சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.