உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளுவை வைத்து கொள்ளு சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1/2 கப் ( 125 கிராம் )
பச்சரிசி - 1 கப் ( 250 கிராம் )
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 3
உப்பு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
தக்காளி - 3
கறிவேப்பில்லை
கொத்தமல்லி இலை
தண்ணீர் - 3 கப்
செய்முறை
கொள்ளு பருப்பை 8 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.
பிறகு கடலை பருப்பு, கடுகு, சீரகம், பெருஞ்சீரகம் சேர்த்து வறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
கொள்ளு சாதம் | Kollu Sadam Recipe in Tamil | Weight Loss Recipes | Lunch Box Recipes | Kollu Recipes
உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள். கொத்தமல்லி தூள் சேர்த்து, நன்கு கலக்கவும். நறுக்கிய தக்காளியை சேர்த்து, அனைத்தையும் கலக்கவும். ஊறவைத்த கொள்ளு பருப்பு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
அரிசி மற்றும் கொள்ளு பருப்பை சமைக்க போதுமான தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும்.
விசில் வந்தத்ம் இறக்கினால் அவ்வளவுதான் சுவையான கொள்ளு பருப்பு சாதம் ரெடி.