சப்பாத்திக்கு இப்படி ஒரு சைட் டிஷ் நிச்சயம் ட்ரை செய்திருக்க மாட்டீங்க: இங்கே தெரிந்து கொள்ளுங்க!

சப்பாத்தி, சாதத்திற்கு கொள்ளு மசாலா ட்ரை செய்து பாருங்க.

சப்பாத்தி, சாதத்திற்கு கொள்ளு மசாலா ட்ரை செய்து பாருங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Horsegram

Food

கொள்ளு உடல் நலத்திற்கு நல்லது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். இருப்பினும் கொள்ளு சூடு நிறைந்தது என்றதால் அடிக்கடி சாப்பிட வேண்டாம். சப்பாத்தி செய்யும் போது கொள்ளு மசாலா ட்ரை செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

கொள்ளு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் கொள்ளு பருப்பை வேக வைத்து எடுக்கவும். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும், உப்பு சேர்க்கவும். வேக வைத்த கொள்ளுவை ஓரளவு மசித்து சேர்க்கவும். மசாலா திக்கான பதம் வந்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். அவ்வளவு தான் சப்பாத்தி, சப்பாட்டிற்கு வைத்து சாப்பிட சுவையான கொள்ளு மசாலா ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: