மலச்சிக்கலுக்கு சுமுக தீர்வு... வெந்நீருடன் கொஞ்சம் தேன்; இன்னும் செம்ம டிப்ஸ் சொல்லும் டாக்டர் ஷர்மிகா

மலச்சிக்கலுக்கு வெந்நீரும் தேனும் உதவுவதாக டாக்டர் ஷர்மிகா கூறுகிறார். அதனை எப்படி எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் சரியாகும் என்றும் கூறியுள்ளார்.

மலச்சிக்கலுக்கு வெந்நீரும் தேனும் உதவுவதாக டாக்டர் ஷர்மிகா கூறுகிறார். அதனை எப்படி எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் சரியாகும் என்றும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
constipitation sharmika

மலம் கட்டுதல் போன்ற மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் செய்ய வேண்டிய சில முக்கியமான குறிப்புகளை பற்றி டாக்டர் ஷர்மிகா டெய்ஸி ஹாஸ்பிட்டல் பக்கத்தில் கூறுகிறார். மலச்சிக்கலை குணப்படுத்த உதவும் பத்து முக்கிய குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற முடியும் என்பதையும் கூறுகிறார். 

Advertisment

1. காலையில் எழுந்தவுடன், ஒரு ஸ்பூன் 'திரிபுலா சூரணம்' எனப்படும் ஆயுர்வேத பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரும் அருந்துவது செரிமானத்தை தூண்டவும், கழிவுகளை வெளியேற்றவும் உதவும்.

2. காலை உணவாக பழங்களை மட்டும் உட்கொள்வது நல்லது. பழங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

3. மலசனம் (இந்தியன் டாய்லெட் போஸ்) மற்றும் சைல்ட்ஸ் போஸ் போன்ற யோகாசனங்கள் வயிற்றுப் பகுதிக்கு அழுத்தம் கொடுத்து குடல் இயக்கத்தை சீராக்க உதவுகின்றன. இவற்றை தினமும் பயிற்சி செய்வது மலச்சிக்கலுக்கு நல்ல பலன் தரும்.

Advertisment
Advertisements

4. வெதுவெதுப்பான நீரில் சப்ஜா விதைகளை கலந்து குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, நார்ச்சத்து மிக்கது என்பதால் மலச்சிக்கலுக்கும் நிவாரணம் அளிக்கும்.

5. தேன் கலந்த வெதுவெதுப்பான நீரை அருந்திவிட்டு நடப்பது செரிமானத்தை ஊக்குவிக்கும். தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கும், குடல் இயக்கத்திற்கும் நல்லது.

6. இரவு உணவில் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ள காய்கறிகள் மற்றும் உணவுகளை உட்கொள்வது நல்லது. பழங்களை இரவு நேரத்தில் தவிர்ப்பது செரிமானத்திற்கு உதவும். இலகுவான இரவு உணவு மலச்சிக்கலைத் தடுக்க முக்கியம்.

7. வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை பயன்படுத்தும்போது, கால்களுக்கு அடியில் ஒரு சிறிய ஸ்டூல் வைப்பது மலசன நிலையை ஒத்திருப்பதால், மலம் வெளியேறுவது எளிதாகும்.

8. மன அழுத்தம் செரிமான அமைப்பை பாதிக்கும். எனவே, மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியாக இருப்பது மலச்சிக்கலைத் தடுக்க உதவும். தியானம், யோகா போன்ற மனதை அமைதிப்படுத்தும் முறைகளை பின்பற்றலாம்.

9. இரவு 10 மணி முதல் காலை 5 அல்லது 6 மணி வரை போதுமான தூக்கம் உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு அவசியம். சரியான தூக்கம் செரிமான மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

10. ஹார்மோன் பிரச்சினைகள் சில நேரங்களில் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கலாம். எனவே, உங்களுக்கு ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

இந்த பத்து குறிப்புகளையும் பின்பற்றுவதன் மூலம் மலச்சிக்கலை திறம்பட குணப்படுத்த முடியும். மேலும், சூரிய உதயத்துடன் உணவு உட்கொள்வது மற்றும் இரவு நேர உணவைத் தவிர்ப்பது போன்ற இயற்கை முறைகளை கடைப்பிடிப்பதும் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்று டாக்டர் கூறுகிறார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Easy home remedies to relieve from constipation Best tips to avoid constipation

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: