மலச் சிக்கல்? இத செஞ்சா எட்டிக்கு கூடப் பார்க்காது: டாக்டர் கௌதமன் டிப்ஸ்!

எல்லோரும் குளிர்ந்த நீரை பருகும் நிலையில் இளஞ்சூடான வெந்நீருடன் நாளை தொடங்குவது பல அற்புதமான ஆற்றலை அளிக்கும். அதை பற்றி டாக்டர் கௌதமன் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.

எல்லோரும் குளிர்ந்த நீரை பருகும் நிலையில் இளஞ்சூடான வெந்நீருடன் நாளை தொடங்குவது பல அற்புதமான ஆற்றலை அளிக்கும். அதை பற்றி டாக்டர் கௌதமன் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
download (9)

தினமும் காலையில் எழுந்ததும் டீ.. காஃபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் நாளின் தொடக்கத்தில் தண்ணீர் குடித்து தொடங்குவது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisment

எல்லோரும் குளிர்ந்த நீரை பருகும் நிலையில் இளஞ்சூடான வெந்நீருடன் நாளை தொடங்குவது பல அற்புதமான ஆற்றலை அளிக்கும். அப்படியான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.

உண்மையில் வெந்நீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் செய்யும். மேலும் இளஞ்சூடான நீரை பருகும் போது நம்பகமான ஆராய்ச்சி ஒன்று 130 மற்றும் 160 டிகிரி ஃபாரன் ஹீட் இடையே உகந்த வெப்பநிலையை பராமரிக்கிறது.

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Advertisment
Advertisements

சூடான நீர் இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுகிறது. உடலில் இருந்து திரட்டப்பட்ட நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடல் வெப்பநிலையை உயர்த்தி வியர்வையை தூண்டுகிறது. இதனால் உடலில் இருக்கும் கழிவுகள் மற்றும் அசுத்தங்களை அகற்ற செய்கிறது.

மேலும் இளஞ்சூடான நீர் இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் ஓட்டத்தை மேம்படுத்த செய்கிறது. இளஞ்சூடான நீர் வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்ற வெந்நீர் உதவும்.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது உடலில் வளர்சிதை மாற்றத்தை தூண்டி செரிமானத்துக்கு உதவும். இது இரைப்பை குழாயை தூண்டுவதாக சொல்லப்படுகிறது.

இளஞ்சூடான நீர் செரிமான உறுப்புகளை தூண்டி அன்றைய நாளில் உணவு ஜீரணிக்கும் வகையில் செயல்படுகிறது. இதனால் உணவு துகள்கள் திறம்பட உடைக்கப்படுவதால் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களையும் திறம்பட உடல் உறிஞ்ச செய்கிறது.

காலையில் எழுந்த உடன் மலம் கழிப்பது உடல் கழிவை வெளியேற்றுவதில் முக்கியமான பணி ஆகும். தினசரி மலம் கழிப்பதில் சிக்கலாக இருந்தால் மலச்சிக்கல் வராமல் தடுக்க காலை எழுந்த உடன் ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கலாம்.

வெந்நீர் குடல் இயக்கத்தை தூண்டி மலச்சிக்கலை எளிதாக்கும். மலத்தை மென்மையாக்கி முழுமையாக வெளியேறும். ஒட்டுமொத்த குடல் பழக்கத்தை மேம்படுத்த உதவும்.

காலையில் வெறும் வயிற்றில் நீரேற்றமாக இருப்பது நாளை நீரேற்றத்துடன் தொடங்குவதற்கு பெரிதும் துணை புரியும். தினசரி நாளை நீரேற்றத்துடன் தொடங்க விரும்பினால் சூடான நீர் உட்கொள்வது பலனளிக்கும்.

நீரேற்றமாக இருப்பதன் மூலம் நாளின் தொடக்கம் முதல் ஊட்டச்சத்து வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் அறிவாற்றல் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளையும் உடல் ஆதரிக்கிறது.

காலையில் வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்புளித்து ஒரு டம்ளர் நீரை குடிப்பது பாக்டீரியா மற்றும் ப்ளேக் அகற்ற உதவுகிறது. மேலும் இது சிறந்த வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்கிறது. மேலும் ஈறு வீக்கத்தை தணிக்கவும் ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்யும்.

வெதுவெதுப்பான நீர் குடிப்பது பல் ஆரோக்கியம் மேம்படுத்த செய்யும். மேலும் பல் வலி இருப்பவர்களுக்கு தற்காலிகமாக பல்வலி மற்றும் உணர்திறனை தணிக்க செய்யும். காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது பற்களில் உள்ள டார்ட்டர் மற்றும் ப்ளேக் கட்டமைப்பை அகற்ற செய்து ஒட்டுமொத்த பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடல் அசெளகரியத்தை தணிக்க செய்யும் வகையில் உடல் வலியை குறைக்க காலையில் வெந்நீர் குடிப்பது நன்மை செய்யும். இது இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை மேம்படுத்துகிறது. 

இதனால் காயமடைந்த தசைகள் தளர்த்தும் வகையில் சூடான நீரை குடிப்பது சில உள்வலி நிவாரணத்தையும் அளிக்கும். தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க செய்யும்.

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது நன்மையே என்றாலும் கூட சரியான வெப்பநிலையில் குடிக்க வேண்டும். தண்ணீரின் வெப்பநிலை 130 டிகிரி ஃபாரன் ஹீட் - 160 டிகிரி ஃபாரன் ஹீட்டில் இருக்க வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: