தினசரி காலையில் நம்மால் குடிக்க முடிந்த சூட்டில் ஒரு 200 மில்லி சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீரை உட்கொள்வது நமது உடல் செயல்பாடுகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதேபோல வெந்நீர் பல்வேறு வழிகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக மருத்துவர் கௌதமன் கூறுகிறார்.
- காலையில் எழுந்தவுடன் வயிற்றுவலி, வாய்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, இந்த வயிற்றுப் பிரச்சினைகளையும் போக்கும். மேலும் வயிறு உப்பசம், நெஞ்சு எரிச்சல் உட்பட்ட பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாகும்.
- சூடான அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் சேரும் அழுக்குகள் சுத்தமாகும். மேலும் கொலஸ்ட்ரால் கொழுப்பு விகிதாச்சாரத் தன்மை குறையும்.
- உடல் எடை குறைக்கவும் அதனை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும்.வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இது கொழுப்பை கரைக்க உதவுகிறது. இது கலோரி எரியும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது.
- உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு பிரச்சனை தவிர்க்க முடியும். இது உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைப் பெற உதவுகிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து வர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது கடுமையான நோய்களுடன் எதிர்த்து போராட, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.
- நீண்ட நேரம் ஏசி மற்றும் சில்லென்ற காற்றில் இருப்பதால் உண்டாகும் தசை, மூட்டுகளில் இறுக்க கூடிய இறுக்கம் குறையும்.
- ஒவ்வாமை, அலர்ஜி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் வெந்நீர் குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் குடிப்பதால் சளி, இருமல், சளி ஒழுகுதல் உள்ளிட்ட பிரச்சனை குணமாகும்.
- காலையிலேயே உடல் சோர்வாக சோம்பேறி தனமாக உணர்பவர்கள் வெந்நீர் குடித்து வர அந்த நாள் முழுக்க உற்சாகமாகவும் சுறுசுறுப்பாக உடல் இருக்க உதவும்.
- உடலில் மெட்டபாலிசத்தை சீராக வைத்து கொள்ள உதவும். இதனால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த உதவும்.
- வெந்நீர் குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே தொடர்ந்து சுடு தண்ணீர் குடிப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும்.
தொடர்ந்து 48 நாட்கள் வெந்நீர் குடித்து வந்தாலே உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை காணலாம். எனவே வெந்நீரை தினசரி காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது என்பது முக்கியமான ஒன்றாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.