Advertisment

அரை கிலோ கோதுமை மாவுடன் 2 ஸ்பூன் மைதா... ஹோட்டல் டேஸ்டில் சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணுங்க

ஹோட்டலில் செய்வது போல் மெது மெதுப்பான சப்பாத்தி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுவையான சப்பாத்தி... மாவு ஃப்ரெஷ்ஷாக வைப்பது எப்படி?

தேவையானவை 

Advertisment

கோதுமை மாவு 
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கொண்டைகடலை மாவு- 50 கிராம் 
உப்பு 
எண்ணெய்
சர்க்கரை

செய்முறை 

ஒரு பாத்திரம் எடுத்து கோதுமை மாவு, மைதா, கொண்டைகடலை மாவு சேர்த்து கலக்கி உப்பு, 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வெது வெதுபான தண்ணீர் சேர்த்து மாவு பிசையவும். இதன் பின் எண்ணெய் சேர்க்கவும். நன்கு பிசையவும். அதன் பின் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அதன் பின் வழு வழுப்பாக இருக்கும். இப்போது மீண்டும் பிசையவும். அதன் பின் உருண்டை பிடிக்கவும். மேலே உதிரி கோதுமை, மைதா மாவை தூவி விட்டு எப்போதும் போல் சப்பாத்தி தேய்க்கவும். 

இப்போது அதை எப்போதும் போல் தோசை கல்லில்  போட்டு எடுக்கவும். சப்பாத்தி போடும் முன் கல் நன்கு சூடாக இருக்க வேண்டும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment