கெட்டி சால்னா, இடியாப்பம், பரோட்டா, அல்லது தோசை போன்ற உணவுகளுடன் சுவை சேர்க்கும் ஒரு பிரபலமான துணை உணவாகும். ஆனால் இது அதிகம் கடைகளில் தான் கிடைக்கும். அதை எப்படி அதே சுவையுடன் வீட்டில் வைப்பது என்று இந்தியன் ரெசிப்பீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
எண்ணெய் கசகசா சீரகம் சோம்பு மிளகு கிராம்பு ஏலக்காய் பட்டை ஸ்டார் அன்னாசி பூ வெங்காயம் தேங்காய் முந்திரி பருப்பு உப்பு தக்காளி பிரியாணி இலை இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் கொத்தமல்லி தூள் மிளகாய் தூள் கரம் மசாலா மிளகு தூள் புதினா இலைகள் கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, கசகசா, சீரகம், சோம்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, மற்றும் ஸ்டார் அன்னாசி பூ சேர்த்து நன்றாக வதக்குங்கள். இதனுடன் சிறிய வெங்காயம், தேங்காய், முந்திரி பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்குங்கள்.
பிறகு, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை சமைக்கவும். அடுப்பை அணைத்து, கலவை ஆறியதும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு குக்கரில் ¼ கப் எண்ணெய் சூடாக்கி, பிரியாணி இலை மற்றும் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மென்மையாகும் வரை வதக்குங்கள்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும். மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்குங்கள்.
இப்போது, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நீங்கள் விரும்பும் பதம் வரும் வரை கலக்கவும்.
குக்கர் மூடியை மூடி, ஒரு விசில் வரும் வரை அதிக தீயில் சமைக்கவும். அழுத்தம் தானாகவே வெளியேறட்டும். மூடியைத் திறந்து, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.
இப்போது சுவையான கெட்டி சால்னா தயார். இதை சூடான இடியாப்பம், தோசை, சப்பாத்தி அல்லது பரோட்டாவுடன் பரிமாறலாம்.