உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்யுபோது அதற்கு என்ன குருமா செய்வது என்று தெரியவில்லையா? அப்போ, ஒரு முறை ஹோட்டலில் கொடுப்பது போன்ற வெள்ளை குருமாவை செய்யுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஹோட்டல் ஸ்டைலில் வெள்ளை குருமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
பச்சை மிளகாய்
இஞ்சி, பூண்டு,முந்திரி
கசகசா, தேங்காய்
தேங்காய் எண்ணெய்
சோம்பு,பட்டை
பிரியாணி இலை
அன்னாசிப்பூ, மராட்டி மொட்டு
கிராம்பு
வெங்காயம்
காலிஃப்ளவர்,பட்டாணி
கேரட்
பீன்ஸ்
உருளைக்கிழங்கு
தக்காளி
உப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லி
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில் முந்திரி, கசகசா சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். பின்னர் அதில் துருவிய தேங்காயை சேர்த்து, லேசாக வதக்கி இறக்கி ஆற வைத்து மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக எடுக்கவும்.
பின்னர் வேறொரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, மராட்டி மொட்டு, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய காலிஃப்ளவர், பட்டாணி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு வதக்கி காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு நீரை ஊற்றி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி மூடி வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
காய்கறிகள் நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். குருமா நன்கு கொதித்து கெட்டியாகத் தொடங்கியதும் கறிவேப்பிலை, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“