வெங்காயம், தக்காளி கொண்டு ரோட்டுக் கடை ஸ்டைலில் பாயா எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவைக்கு எத்தனை ஆப்பம் சுட்டாலும் போதும் என்று சொல்ல மனம் வராது.
தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய்,
மிளகு,
கடலை பருப்பு,
சீரகம்,
பட்டை,
ஏலக்காய்,
சோம்பு,
கசகசா,
முந்திரி,
பச்சை மிளகாய்,
புதினா,
கொத்தமல்லி,
மஞ்சள் தூள்,
கரம் மசாலா,
பிரிஞ்சி இலை,
வெங்காயம்,
தக்காளி மற்றும்
கறிவேப்பிலை.
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு கடலை எண்ணெய் ஊற்றவும். இதில் பாயாவுக்கு தேவையான அளவு மிளகு, கடலை பருப்பு, சீரகம், பட்டை, ஏலக்காய், சோம்பு, கசகசா, முந்திரி சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
இவற்றின் நிறம் மாறியதும் பச்சை மிளகாய், தேங்காய், புதினா கொத்தமல்லி, மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும்.
இப்போது, அடுப்பில் குக்கர் வைத்து அதில் சிறிது கடலை எண்ணெய் ஊற்றி, பிரிஞ்சி இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கலாம். இதன் பின்னர், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கலாம்.
இதையடுத்து, இந்தக் கலவையுடன் கறிவேப்பிலை, அரைத்து வைத்த மசாலா சேர்த்து கலக்க வேண்டும். இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கினால் சுவையான பாயா ரெடியாக இருக்கும்.