அவகடோ சமீபக காலமாக அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. இதில் இதய ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கும் மொனோசாச்சுரேடட் கொழுப்பு சத்து இருக்கிறது. வைட்டமின் கே, போலேட், பொட்டாஷியம், வைட்டமின் சி மற்றும் ஈ இருக்கிறது . இதனால் சதைகள் தனைத்தானே குணப்படுத்திக் கொள்ளும்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில், அவக்கடோ சாப்பிடுவதால், கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

கொலஸ்ட்ரால் என்பது நமது உடலின் முக்கியமான ஒன்று. ஆரோக்கியமாக அளவில் கொலஸ்ட்ரால் இருந்தால், நமது செல்களின் வெளிபுறம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் ஈஸ்டோஜன் மற்றும் டெஸ்ட்ரோஸ்டிரான் சுரக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் டி சத்தை பிராசஸ் செய்ய உதவுகிறது.
அதிகளவில் இருக்கும் கொலஸ்ட்ரால் இருந்தால், உங்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படலாம். முட்டை, பால், கோழிக்கறி, மாமிசம் ஆகியவற்றில் சாச்சுரேடட் கொழுப்பு சத்து இருக்கிறது. இது உடலுக்கு நல்லது. ஆனால் பாதப்படுத்தப்பட்ட உணவில், டிரான்ஸ் கொழுப்பு சத்து இருக்கிறது இதனால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம்.

இந்த ஆய்வு படி அவக்கடோவை சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே இருப்பதால் இதில் நார்சத்து இருக்கிறது.
ஆனால் இதுபோல அவக்கடோ அதிக கலோரிகளை கொண்டது, மேலும் இதில் அதிக கொழுப்பு சத்தும் இருப்பதால் அதிகமாக சாப்பிடக்கூடாது. இதுவே உடல் எடையை அதிகரிக்கும்.
நாம் சாப்பிடும் சாலட், டோஸ்ட், அவித்த காய்கறிகளுடன்,ஸ்மூத்தியாக. காலை உணவுடன் சாப்பிடலாம்.