scorecardresearch

சுகர் உள்ளவங்க இதை கவனிக்கவும்: இஞ்சி ரொம்ப முக்கியம்

இஞ்சியில் உள்ள வீக்கத்திற்கு எதிரான பண்புகள், சர்க்கரை நோய் ஏற்படாமலும், சிறுநீரக நோய் ஏற்படாமலும் ஒரு எல்லைவரை தடுக்கும் . இஞ்சியின் நன்மைகள் உள்ள மாத்திரைகளை டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களின் வீக்கம் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்டெஸ்யை குறைக்கிறது.

சுகர் உள்ளவங்க இதை கவனிக்கவும்: இஞ்சி ரொம்ப முக்கியம்

நமக்கு காய்ச்சல் மற்றும் சளித் தொல்லை ஏற்படும்போது, இஞ்சி சாறு நமக்கு உதவும். இவை ஜிஞ்சரால் மற்றும் ஷகோல் இருக்கிறது. இவை வைரஸ் தொற்று எதிராகவும், வீக்கத்திக்கு எதிரான குணத்தை கொண்டது. இஞ்சி, நமது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது, இதனால் சில தொற்றுகளுக்கு எதிராக நமது நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்கிறது. இஞ்சியிலிருந்து எடுக்கப்படும் பொருள், இன்புளுயன்சா வைரஸை இரட்டிப்பாகி பெருகுவதை தடுக்கிறது.

இந்நிலையில் இஞ்சி நமது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடும் வீக்கம், இதய ரத்த குழாய்களில் ரத்தம் கட்டி நின்று ஒரு வித தடையை ஏற்படுத்தும். இதனால் மாரடைப்பு, ஸ்டோக் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இஞ்சியில் இருக்கும் வீக்கத்திற்கு எதிரான பண்பு வீக்கத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொழுப்பை ரத்த குழாய்களில் கூடுதலாக சேராமல் பார்த்துகொள்கிறது. மேலும் ரத்த குழாய்களை விரிவாக்குகிறது. இந்நிலையில் நடைபெற்ற ஆய்வில், கொலஸ்ட்ராலை குறைக்கவும், கூடுதலாக ரத்தம் உரையாமல் தடுக்கவும் இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரால் உதவுகிறது.

இஞ்சியில் உள்ள வீக்கத்திற்கு எதிரான பண்புகள், சர்க்கரை நோய் ஏற்படாமலும், சிறுநீரக  நோய் ஏற்படாமலும்  ஒரு எல்லைவரை தடுக்கும் . இஞ்சியின் நன்மைகள் உள்ள மாத்திரைகளை டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களின் வீக்கம் மற்றும் ஆக்ஸிடேட்டிவ்  ஸ்டெஸ்யை குறைக்கிறது. இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரோல்ஸ், தசைகளால் நேரடியாக குளுக்கோஸை எடுத்துக்கொள்ளும் ஆற்றலை உடலுக்கு தருகிறது. இன்சுலின் தேவையில்லை என்பதால் ரத்த சர்ககரையை கட்டுபடுத்த உதவுகிறது.

இஞ்சியிலிருந்து எடுக்கப்படும் ஸ்பிஸ்சம் மற்றும் எண்ணெய் போல ஒரு பொருள் இஞ்சிலின் சுரப்பத்தில் சிக்கல் வராமல் இவை பார்த்துகொள்கிறது. இதைவைத்து சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கும்போது, 35 % ரத்த குளூக்கோஸ் அளவு குறைகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: How can ginger control blood sugar levels and regulate insulin