scorecardresearch

தினமும் காலையில் வெண்டைக்காய் தண்ணீர்: சுகர் உள்ளவங்க இதை மிஸ் பண்ணாதீங்க

வெண்டைக்காய்-ஐ இரவில் தண்ணீரில் ஊறவிட்டு. காலையில் அந்த தண்ணீர் குடித்தால் ரத்த சர்க்கரையை கட்டுபடுத்தும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.

தினமும் காலையில் வெண்டைக்காய் தண்ணீர்: சுகர் உள்ளவங்க இதை மிஸ் பண்ணாதீங்க

வெண்டைக்காய்-ஐ  இரவில் தண்ணீரில் ஊறவிட்டு. காலையில் அந்த தண்ணீர் குடித்தால் ரத்த சர்க்கரையை கட்டுபடுத்தும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.

வெண்டைக்காய் நமது ரத்த சர்க்கரையை கட்டுபடுத்தும் என்று கூறப்படுகிறது. இதில் இருக்கும் கரைக்கூடிய நார்சத்து நமக்கு உணவு முழுமையாக சாப்பிட்ட எண்ணத்தை உண்டாக்கும்.  இதனால் அதிக கலோரிகளை நாம் எடுத்துக்கொள்ள மாட்டோம். 2011ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில், வெண்டைக்காய் சாப்பிடுவதால், ரதத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வெண்டைக்காய் சாப்பிட்டபோது தொடர்ந்து ரத்த குளுக்கோஸ் அளவு குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டது.

100 கிராம் வெண்டைக்காயில் 4 கிராம் கரையக்கூடிய நார்சத்து இருக்கிறது. இவை உடைவதற்கு அதிக நேரம் எடுத்துகொள்வதால், சர்க்கரை ஆனது ரத்தத்தில்  வெளியாவதற்கு நேரம் எடுக்கும். மேலும் வெண்டைக்காயில்,          பைட்டோ கெமிக்கல்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாஷியம் , லினோலிக் ஆசிட், வைட்டமின் சி,  கால்சியம், புரோட்டீன், போலேட் இருக்கிறது.

ஒரு கப் வெண்டைக்காய்யை சாப்பிட்டால் நமக்கு 37 கிராம் போலேட் கிடைக்கும். நார்சத்து மட்டுமல்ல, இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் வைட்டமின் பி6, போலேட் ஆகியவை நமது ரத்த சர்க்கரை சீராக வைத்துக்கொள்ளும். மேலும் இதில் குறைந்த கிளைசிம் இண்டக்ஸ் இருக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: How does okra reduce blood sugar and why is it a superfood

Best of Express