நாம் காலை வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாது என்பதற்காக அத்துடன் பிஸ்கட்டையும் சேர்த்து சாப்பிடுவோம். இது காலையுடன் மட்டுமே நின்றுவிடும் என்று நினைபோம். ஆனால் அது காலையுடன் நின்றுவிடாது. நாள் முழுவதும் நாம் காப்பி அல்லது டீயுடன் பிஸ்கட்டை சாப்பிடுவோம்.
எதிர்பாரத விதமாக பிஸ்கட்டில் அதிக கலோரிகள் உள்ளது. ஒரு மேரி பிஸ்கட்டில் 40 கலோரிகள் கொண்டது. இதுவே க்ரீம் சேர்த்த பிஸ்கட்டில் 100 முதல் 150 கலோரிகள் இருக்கும். நம்மால் ஒரு பிஸ்கட்டுடன் நிறுத்திகொள்ள முடியாது. பிஸ்கட்டுகள், சுத்திகரிக்கப்பட்ட மைதாவால் செய்யப்படுகிறது. இது வேகமாக ஜீரணமாகி, இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கும். மேலும் எடை அதிகரிக்கும்.
பிஸ்கட்டில் கெமிக்கல்ஸ், எமுல்சிபையர்ச் மற்றும் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதில் பதப்படுத்தும் கெமிக்கஸ் சேர்க்கப்படும். மேலும் அதிக உப்பு அல்லது அதிக சர்க்க்ரை இருக்கும். அதிக சோடியத்தை நாம் எடுத்துக்கொண்டால் வயிறு உப்புதல், வயிறு விக்கம் மற்றும் உடல் எடை அதிகரிக்கும். அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பிஸ்கட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சுகர் ப்ரீ பிஸ்கட் என்று கூறப்படுவதை நாம் நம்ப முடியாது. செயற்கையான இனிப்பூட்டி, ஆஸ்பர்ட்டமே, நமது உடல் செயல்பாட்டை பாதித்து, குடலில் இருக்கும் நல்ல பாக்டிரீயாவை பாதிக்கும். இதிபோல ஏற்பகனவே இனிப்பாக இருக்கும் பிஸ்கட்டை மீண்டும் டீ அல்லது காப்பியில் முக்கி சாப்பிட்டால் கூடுதலாக சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
இந்நிலையில் பாதாம், மகானா, வறுத்த கொண்டைக்கடலை ஆகியவற்றை நாம் பிஸ்கட்டுக்கு பதிலாக சாப்பிடலாம். இதை நீங்கள் பிஸ்கட்டு மாற்றாக எடுத்துகொள்ள முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil