பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவில் அதிக கார்போஹைட்ரேட்ஸ் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. அதிக அளவு கார்போ ஹைட்ரேட் தரும் அரிசி சோறு அதிகம் சாப்பிடக் கூடாது. மேலும் மூன்று வேளையும் சோறு சாப்பிட கூடாது. அப்படியே சாப்பிட்டாலும் அதில் காய்கறிகள் மற்றும் புரதத்தின் பங்கு அதிகம் இருக்க வேண்டும்.
தினமும் ஒரு நபர் 250 கிராம் காய்கறிகளை சாப்பிடுங்கள் என்று மருத்துவர் வேணி கூறுகிறார். அதுகுறித்து அவர் நியூரோ டாக்டர் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
கொஞ்சமாக சோறு நிறைய காய்கறிகள் சாப்பிட வேண்டும். அடுத்து அதிக நார்ச்சத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நிறைய காய்கறிகளை சாப்பிட வேண்டும். குறைந்தபட்சம், 250 கிராம் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
பின்னர் இரவு உணவை 7 மணிக்கு முன்பாகவே சாப்பிட்டு முடிக்க வேண்டும். அதுவும் மாத்திரைகள் எடுத்து கொள்பவர்கள் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தாமதமாக சாப்பிடுவது பேட்டி லிவர் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
இரவு உணவாக எதை சாப்பிட்டால் நல்லது? | What's good for dinner? Dr A.VENI | RockFort Neuro Centre
அதுமட்டுமின்றி 7 மணிக்கு முன்பு சாப்பிடுபவர்கள் மாவுச்சத்து குறைவாகவும் புரதம் அதிகமாகவும் சாப்பிட வேண்டும். அதேபோல அசைவம் சாப்பிடுபவர்கள் கறியை அதிகமாக சாப்பிடலாம்.
தாமதமாக சாப்பிடுபவர்கள் சுண்டல் மற்றும் பயிறு வகைகள் சாப்பிடலாம். மேலும் காய்கறிகள், பன்னீர் சாப்பிடலாம். அதேபோல தாமதமாக சாப்பிடும் அசைவ பிரியர்கள் முட்டை, குழம்பில் போட்ட மீன் போன்றவற்றை சாப்பிடலாம். எனவே சாதத்தை குறைத்து காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.