சுகர் பேஷண்ட்ஸ் தர்பூசணி சாப்பிடணும்னு ஆசையா இருக்கா? அப்போது இந்த அளவு ரொம்ப முக்கியம்

300 கிராம் தர்பூசணி சாப்பிட்டல், 15 கிராம் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொண்டது சமமாகும். இதனால் நாம் நமது சில உணவுகளை கைவிட்டு இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

300 கிராம் தர்பூசணி சாப்பிட்டல், 15 கிராம் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொண்டது சமமாகும். இதனால் நாம் நமது சில உணவுகளை கைவிட்டு இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
New Update
தர்பூசணி

வெயில் காலம் என்றாலே தர்பூசணி பழங்களை நாம் சாப்பிடுவோம். வெப்ப நிலையை உடல் தாங்கிக்கொள்ள இந்த தர்பூசணி பழங்கள் நமக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் இதில் இனிப்பு தன்மை இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் நாம் தர்பூசணி பழங்களில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ள வேண்டும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்சத்து உள்ளது. இதனால் இதை நாம் நமது டயட் பிளானில் சேர்க்க முடியும். இதில் லைக்கோபென்னே ( lycopene) என்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இது நம்மை புற்று நோய் மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்கும். 92 சதவிகிதம் இதில் நீர் சத்து உள்ளது. இதனால் நமது உடல் வரட்சியடையாமல் பார்த்துக்கொள்கிறது. மேலும் இந்த நீர் சத்து சீரணத்திற்கும் உதவுகிறது.

இதில் போலேட், பொட்டசியம், பைடோகெமிக்கல்ஸ் இருக்கிறது. இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் 72 புள்ளிகள் உள்ளது. இவை மிதமான முதல் அதிக அளவிற்கு இடைபட்ட அளவில் உள்ளது. ஆனால் இதன் கிளைசிமிக் லோட் 120 கிராம் தர்பூசணியில் வெறும் 5% உள்ளது.

கிளைசிமிக் லோட் என்றால், நாம் எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் எவ்வளவு வேகமாக நமது ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் என்பதை குறிப்பது. இந்நிலையில் கிளைசிமிக் லோட் குறைவாக இருப்பதால் நாம் இதை தயக்கம் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம்.

Advertisment
Advertisements

இந்நிலையில் 300 கிராம் தர்பூசணி சாப்பிட்டல், 15 கிராம் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொண்டது சமமாகும். இதனால் நாம் நமது சில உணவுகளை கைவிட்டு இதை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக  இனிப்பாக எதாவது சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், தர்பூசணி பழங்களை தேர்வு செய்வது சரியாக இருக்கும். இதனால் அடிக்கடி பசி ஏற்படும் தன்மை குறையும்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: