scorecardresearch

தினமும் ஒரு மாதுளை: ஆனா இந்த நேரத்தில்தான் சாப்பிடணும்: வயதாவதை தடுப்பது முதல் கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு வரை   

மாதுளை ஒரு அற்புதமான பழம். பொட்டாசியம் சத்தை பிரதானமாக கொண்டுள்ளது. நமது தசைகள் செயல்படுவதற்கான எக்ட்ரோலைட் தன்மை கொண்டது. மேலும் நமது இதயத் துடிப்பையும் சீராக்குகிறது.

தினமும் ஒரு மாதுளை: ஆனா இந்த நேரத்தில்தான் சாப்பிடணும்: வயதாவதை தடுப்பது முதல் கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு வரை   

மாதுளை ஒரு அற்புதமான பழம். பொட்டாசியம் சத்தை பிரதானமாக கொண்டுள்ளது. நமது தசைகள் செயல்படுவதற்கான எக்ட்ரோலைட் தன்மை கொண்டது.  மேலும் நமது இதயத் துடிப்பையும் சீராக்குகிறது.

காலை உணவுடன் மாதுளையை சாப்பிட்டால், நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.இதுபோல ரத்த சோகை, சர்க்கரை நோய், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில்,  வயதாவதை தடுக்கவும் உதவுகிறது.

இந்நிலையில் ஒரு கிரீன் டீ அல்லது ரெட் வையினில் உள்ள ஆண்டி ஆக்ஸ்லிடண்ட் அளவைவிட இதில் 3 மடங்கு ஆண்டி ஆக்ஸ்லிடண்ட் இருக்கிறது.  குறிப்பாக இதில் இருக்கும்  பினிகலகின்ஸ்( punicalagins) நமது உடலை ஃபிரீ ராடிகல்ஸ் பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது.

மாதுளையின் விதைகள் நமது சருமத்தை சிதைவிலிருந்து பாதுகாக்கிறது. நமது சருமத்தின் தன்மையை ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது. தோல் சுருக்கம், கருவளையம் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.

மாதுளை நமது உடலை குளூடத்தயோன் (glutathione) என்ற பொருளை சுரக்க வைக்கிறது. இது சருமத்தின் சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் வயதான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தாமல் அதன் அறிகுறிகளை தடுக்கிறது. இது நமது உடலின் ஈரப்பத்தத்தை அதிகரிக்கிறது.

இதில் பொட்டாஷியம் மற்றும் எலக்ட்ரோலைட் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது எச்.டி.எல் கொலஸ்ட்ரலை அதிகமாக தூண்டுகிறது. இதனால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிறது.

மேலும் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படியும், இதனால் இதய நோய் ஏற்படும். இதனால் இதய ஆரோக்கியத்திற்கு மாதுளை உதவுகிறது.

இதில் அதிக நார்சத்து இருக்கிறது, இது ரத்த குளூகோஸ் அதிகரிக்காமல் இருக்கவும். உணவை மெதுவாக உடைத்து உடலை எடுத்துக்கொள்ள வைக்கும். இதனால் உடனடியாக ரத்த சர்க்க்ரை அதிகரிக்காது. மேலும் டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை குறையவும் உதவுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: How pomegranates can delay ageing