சுகர் பேஷன்ட்ஸ் ப்ளீஸ் நோட்: எந்த சமயல் எண்ணெய் பயன்படுத்தலாம்? எவ்வளவு பயன்படுத்த வேண்டும்  ? மருத்துவரின் அறிவுரை

தினமும் நாம் சமயலில் சேர்த்துகொள்ளும் எண்ணெய்யின் அளவு மற்றும் தரம் மிகவும் முக்கியம். நீங்கள் குறைந்த எண்ணெய் பயன்படுத்துவதால் மட்டும், இதில் நச்சுதன்மை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சுகர் பேஷன்ட்ஸ் ப்ளீஸ் நோட்: எந்த சமயல் எண்ணெய் பயன்படுத்தலாம்? எவ்வளவு பயன்படுத்த வேண்டும்  ? மருத்துவரின் அறிவுரை

சர்க்கை நோய் மற்றும் உடல் பருமன் என்று மருத்துவர்களை அணுகும் மக்களுக்கு ஒரு சாதாரண அறிவுரைகளை வழங்குவதோடு நிறுத்திகொள்வது சரியாக இருக்குமா ? என்று எனக்கு தெரியவில்லை என்று கூறுகிறார் டாக்டர் அனூப் மிஸ்ரா. குறிப்பாக பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களோ ஒரு கிண்ணம் முழுவதும் வெண்ணையை உருக்கி சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடுவார்கள்.  இது பற்றி மருத்துவர்கள் கூறவில்லையே என்பார்கள். எனது தாத்தா தினமும் 100 கிராம் நொய் மற்றும் வெண்ணையை சாப்பிட்டு 95 வயது வரை வாழ்ந்தார். உங்கள் தாத்தாவும் அப்படி வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தினமும் 15 கிலோமீட்டர் வரை நடந்திருப்பார். அவரைப்போன்று நீங்களும் சாப்பிட்டால் உங்கள் குடல் வெடித்துவிடும். இதயம் காலியாகிவிடும். தற்போது நீங்கள் எந்த வேலையையும் செய்யாலம் அதே உணவுகளை சாப்பிடுவது சரியா என்பதை யோசிக்க வேண்டும்.

இந்நிலையில் தினமும் நாம் சமயலில் சேர்த்துகொள்ளும் எண்ணெய்யின் அளவு மற்றும் தரம் மிகவும் முக்கியம். நீங்கள் குறைந்த எண்ணெய் பயன்படுத்துவதால் மட்டும்,  இதில் நச்சுதன்மை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த 30 வருடங்களில் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் எண்ணெய்யின் தரம் பற்றி புரிதல் நமக்கு ஏற்பட்டுள்ளது. ஏஐஐஎம்எஸ் ( AIIMS ) மற்றும் அமெரிக்காவில் 1980 களில் நடைபெற்ற ஆய்வுகளில்,  மற்ற கொழுப்பு சத்தைவிட மொனோசாச்சுரேடட் கொழுப்பு சத்தை ( monounsaturated fat ) நாம் எடுத்துக்கொள்ளும்போது, ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறைகிறது என்றும் மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளின் அளவும் குறைகிறது என்று கூறப்படுகிறது. இந்த வகை கொழுப்பு சத்து ஆலிவ் மற்றும் கனொலா எண்ணெய்யில் இருக்கிறது. இதுபோல கடுகு எண்ணெய்யிலும் இது இருக்கிறது.  அவக்கடோ, பிஸ்தா, வால்நட், பாதாம், எள்ளில் இருக்கிறது.

சர்க்கரை நோய் பாதிப்பு, இதய பாதிப்பு உள்ளவர்கள் தினமும் ஆலிவ் ஆயில், மற்றும் நட்ஸ் எடுத்துகொள்வது நல்லது.

இரண்டாவது நன்மைதரக்கூடிய விஷயமாக நல்ல கொழுப்பு சத்து என்று கூறப்படும் பாலிஃசாச்சுரேடட் ( polyunsaturated fat)  என்ற கொழுப்பு சத்து மீன்களில்தான் இருக்கிறது. இந்நிலையில் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இந்த கொழுப்பு சத்து கிடைப்பது குறைவாக இருக்கும். வால்நட், வேர்கடலை, சோயா பீன்ஸ், ஷியா விதைகள், எள்ளு ஆகியவற்றில் இந்த ஒமேகா 3 பேட்டி ஆசிட் இருந்தாலும் மீன்களில் இருக்கும் அளவிற்கு இல்லை.

மேலும் சாச்சுரேடட் கொழுப்பு சத்துதான் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட காரணமாக இருக்கிறது. மேலும் நாம் சாப்பிடும் பாமாயில் எண்ணெய்யில் இது அதிகம் இருக்கிறது. இந்நிலையில் தினமும் நெய் சாப்பிட்டாலும் மாரடைப்பு வரும் வாய்ப்பு 10 மடங்கு அதிகம் என்று ஆய்வுகள் சொல்கிறது. சில ஆய்வுகள் நெய் நல்லது என்று கூறினாலும், அந்த ஆய்வுகளுக்கு அதிக அறிவியல் சான்றுகள் இல்லை. இதுபோலவே தேங்காய் எண்ணெய்யும் உடலுக்கு அதிக  நன்மைகள் தருவதில்லை. மேலும் வன்ஸ்பதி அதாவது டால்டா என்று கூறப்படுவதிலும் அதிக சாச்சுரேடட் கொழுப்பு சத்துதான் இருக்கிறது. இதனால் குடல் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. மேலும் நாம் உணவுகளை சூடுபடுத்தும்போது, டிரான்ஸ் பேட்டி ஆசிட் அதிகமாவதால் இது மேலும் உடலுக்கு கேடு. இதனால் இந்த பழக்கத்தை தவிர்த்துவிடுங்கள். முடிந்தவரை எந்த எண்ணெய்யை பயன்படுத்தினாலும் குறைந்த அளவில் பயன்படுத்துவதே நல்லது என்று கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: How to choose a healthy cooking oil