2023ம் ஆண்டு அரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நாம் முழு தானியங்கள் மற்றும் சிறு தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுதானியங்களில், புரத சத்து, நார்சத்து இருப்பதால், கொல்ஸ்ட்ராலை தடுக்க உதவுகிறது. மேலும் இந்த உணவு மாற்றத்தால், சர்க்கரை நோய் மற்றும் இதயம் சமந்தமான நோய்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.
மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் முழு தானியம் மற்றும் சிறுதானிய வகைகளின் முக்கியத்தும் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சிறுதானிய வகைகளின் பண்பு: இயற்கையாக இனிப்பாக இருக்கும். கடுமையான வாசனை இருக்கும். மேலும் இதை சூடு என்று கூறுவார்கள். இந்நிலையில் சமைக்கப்பட்ட சிறுதானிய வகைகள் எளிதாக சீரணமாகும். பசியை தூண்டும் வகையில் இருக்கும்.
சர்க்கரை நோய்: சிறுதானியத்தில் இருக்கும் மெக்னீஷியம் ரத்த சர்க்கரை அளவை அரோக்கியமாக வைத்திருக்கும்.
இதய நோய்கள் : சிறுதானியத்தில், கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை இருப்பதால், ரத்த குழாய்களில் கொழுப்பு சேராது. மேலும் ஒற்றை தலை வலி மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும்.
உடல் பருமன்: இதில் ஒருக்கும் நார்சத்து, கொழுப்பை கரைக்க உதவும். வைட்டமின் பி3 இருப்பதால், கொலஸ்டரால் குறையும்.
இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் காயங்களை குணப்படுத்தவும். சதைகளை சேதத்திலிருந்து காப்பாற்றுகிறது.
மேலும் இதில் இருக்கும் சில பண்புகள், அல்சர் பிரச்சனை மற்றும் மலச்சிக்கலில் இருந்து குணமடைய உதவுகிறது.
ராகி:
சர்ககரை நோயாளிகளுக்கு நன்மை தரும். இதில் இருக்கும் நார்சத்து கொலஸ்ட்ராலை குறைக்கும். இதனால் மலச்சிக்கல், வயிறு உப்புதல், ஆகியவை நீங்கும்.
தினை அரிசி
எலும்பு முறிவை குணமடையச் செய்யும். மேலும் புண் ஆறுதலை ஊக்கப்படுத்தும். ரத்த சர்க்கரையை குறைக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு ஏற்படும் நோய்களில் இருந்து குணமடையச் செய்யும்.