தமிழ்நாட்டில் முருங்கைக் காய்க்கு மவுசு கூடியதில் பாக்கியராஜ்ஜின் முந்தாணை முடிச்சு படத்துக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. ஆனால், பலரும் முருங்கைக் காய் சாம்பார், காரக்குழம்பு சாப்பிட்டு போரடிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்காக, மட்டன் சுவையில் முருங்கைக் காய் மசாலா பொரியல் எப்படி செய்வது என்று இங்கே கூறுகிறோம். இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்.
மட்டன் சுவையில் முருங்கைக் காய் மசாலா பொரியல் எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் 5 டீஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
உளுந்து கால் ஸ்பூன்
சோம்பு கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் 10
பூண்டு 5 பல்
தக்காளி 1
முருங்கைக் காய் 2
தேவையான அளவு உப்பு
மிளகாய் தூள் - காரம் போதுமான அளவு
கரிவேப்பிலை
கொத்துமல்லி
செய்முறை:
முதலில் ஒரு வானலியை எடுத்து ஸ்டவ்வில் வைத்து பற்றவையுங்கள், வானலி காய்ந்த பிறகு எண்ணெய் சமையல் எண்ணெய்யை ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும், கடுகு அரை ஸ்பூன் போடுங்கள், அடுத்து கால் ஸ்பூன் அளவு உளுந்து போடுங்கள், அடுத்து கால் ஸ்பூன் அளவு சோம்பு போடுங்கள். இவை பொரிந்ததும், சின்ன நறுக்கிய சின்ன வெங்காயம் 10 போடுங்கள். நன்றாக வதக்குங்கள். அடுத்து, பூண்டு 5 பல்லு நசுக்கியது போட்டு நன்றாக
அடுத்து தக்காளி போடுங்கள். நன்றாக வதக்குங்கள். அடுத்து, முருங்கைக் காயை துண்டுகளாக வெட்டி, வானலியில் போட்டு வதக்குங்கள்.
அடுத்து, முருங்கைக்காய் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, வானலியை மூடி, மிதமான தீ வைத்து முருங்கைக் காயை வேக விடுங்கள். முதலிலேயே உப்பு போடாதீர்கள், ஏனென்றால், முருங்கைக் காயின் நிறம் மாறிவிடும், முருங்கைக் காயும் சீக்கிரம் வேகாது. அதனால், முதலிலேயே உப்பு போடாதீர்கள்.
முருங்கைக் காய் வெந்துவிட்டதா என்று பாருங்கள். முருங்கை காய் வெந்ததும், இப்போது தேவையான அளவு உப்பு போடுங்கள். திரும்பவும் 1 டம்பளர் தண்ணீர் ஊற்றி, வானலியை மூடி மிதமான தீயில் முருங்கைக் காயை வேக வையுங்கள்.
தண்ணீர் கொதிக்கும்போது 2 டீஸ் பூன் மிளாய்தூள் போடுங்கள், இன்னும் காரம் தேவை என்றால், உங்களுக்கு தேவையான அளவு மிளகாய்தூள் போட்டுக்கொள்ளலாம். லேசாகக் கிளறிவிடுங்கள், மிளகாய் தூள் வாசனை போகிற அளவுக்கு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். நன்றாக சுண்டியதும், இப்போது கரிவேப்பிலையை மேலே தூவி விடுங்கள், அடுத்து கொத்துமல்லியை நறுக்கி மேலே தூவிவிடுங்கள். அவ்வளவுதான், மட்டன் சுவையில் முருங்கைக் காய் மசாலா பொரியல் தயார். சோறுக்கு முருங்கைக் காய் மசாலா பொரியல் அருமையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.