உங்கள் வீட்டில் சோறு செய்ய வேண்டும் என்றால், நீண்ட நேரம் ஆகும் என்று கவலைப்பட வேண்டாம். குக்கரில் 4 நிமிடத்தில் சோறு வேக வைத்து வடிக்கலாம், இதற்கு டதண்ணீர் எவ்வளவு வைக்க வேண்டுமோ என்று கவலைப் பட வேண்டாம், அதே நேரத்தில் எல்.பி.ஜி கேஸ் செலவு ரொம்ப மிச்சமாகும். உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.
குக்கரில் 4 நிமிடத்தில் சோறு வேக வைத்து வடிப்பது எப்படி என்று இங்கே பார்கலாம்.
முதலில் உங்கள் குக்கரை எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் வழக்கமாக அந்த குக்கரின் அளவுக்கு ஏற்ப எவ்வளவு அரிசி போடுவீர்களோ அவ்வளவு அரிசியை எடுத்து நன்றாகக் கழுவி போடுங்கள். குக்கரில் நன்றாக தாராளமாக தண்ணீர் ஊற்றுங்கள். கேஸ்கட் போட்டு குக்கரை மூடுங்கள். ஆனால், விசில் போட்டு மூடக் கூடாது அதை எடுத்து விடுங்கள்.
இப்போது ஸ்டவ்வைப் பற்ற வைத்து, தீயை சிம்மிலும் இல்லாமல் ஹை ஃபிலேமிலும் இல்லாமல் மிதமான அளவில் தீயை வைத்து வேக விடுங்கள். விசில் வழியாக நன்றாக ஆவி வரும்போது, விசில் எடுத்து மூடி விடுங்கள். விசில் மூடிய பிறகு, கேஸ் ஸ்டவ் எரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஸ்டவ்வை அணைத்துவிட்டு, அப்படியே 4 நிமிடங்கள் விட்டுவிடுங்கள். பிரஸ்ஸர் எதுவும் ரிலீஸ் பண்ணக்கூடாது. அப்படியே இருக்கட்டும்.
இப்போது 4 நிமிடங்களுக்குப் பிறகு, பிரஸ்ஸர் ரிலீஸ் ஆகியிருக்கும் இல்லை என்றால், பிரஸ்ஸர் ரிலீஸ் ஆன பிறகு, திறந்து பார்த்தால் சோறு நன்றாக வெந்து இருக்கும்.
இப்போது விசிலை எடுத்துவிடுங்கள். இப்போது குக்கரைத் திறந்து, பார்த்தால் சோறு நன்றாக வெந்து இருக்கும். இப்போது அதில் இருக்கும் தண்ணீரை வடிக்க வேண்டும். அதற்கு குக்கர் மூடியில் இருக்கும் கேஸ்கட்டை ரப்பரை எடுத்துவிடுங்கள். கேஸ்கட் இல்லாமல் குக்கரை மூடுங்கள். குக்கரை நன்றாக மூடிய பிறகு, நீங்கள் வழக்கமாக ஒரு பாத்திரத்தில் சோறு வடிப்பீர்கள் இல்லையா, அதே போல, குக்கரை அதற்கு ஏற்ற ஒரு பாத்திரத்தில் சாய்த்தால் அதில் உள்ள தண்ணீர் வடிந்துவிடும். இப்போது குக்கரை திறந்து பாருங்கள், பளபளவென வடித்த சோறு கிடைக்கும். சோறு நன்றாக மிருதுவாக வெந்து இருக்கும். உதிரியாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.