உங்கள் வீட்டில் ரேசன் அரசி இருந்தால், 5 கிளாஸ் ரேசன் அரிசிக்கு இவ்வளவு உளுந்து சேர்த்து அரைத்தால் பஞ்சு போல் இட்லி செய்யலாம். எப்படி செய்வது என்று இன்கே தெரிந்துகொள்ளுங்கள்.
பெரும்பாலான வீடுகளில் ரேசன் அரசியை சோறு செய்ய பயன்படுத்தவில்லை என்றாலும் இட்லி தோசை செய்ய பயன்படுத்துகிறார்கள். அதனால், ரேசன் அரசியில் பஞ்சு போல, சாஃப்ட்டா, வெள்ளையா எப்படி இட்லி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
5 கிளாஸ் ரேஷன் அரிசி எடுத்துக்கொள்ளுங்கள். 1 கிளாஸ் உளுந்து அதனுடன் 1 ஸ்பூன் வெந்தயம் எடுத்துக்கொள்ளுங்கள். அரிசியையும் உளுந்தையும் தனித் தனியாக 4-5 முறை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். பிறகு, ஒரு 4-5 மணி நேரம் ஊறவையுங்கள். அரிசி ஊறவைக்கும்போது ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவு உப்பு சேர்த்து ஊறவையுங்கள். ரேசன் அரிசி வாசனை வராமல் இருக்கும்.
இப்போது அரிசியையும் உளுந்தையும் கிரைண்டரில் தனித் தனியாக மாவு அரைத்துக்கொள்ளுங்கள். அரிசியை நைஸாக அரைக்காதீர்கள். கொஞ்சம் ரவைபோல இருக்கும் விதமாக அரைத்துக்கொள்ளுங்கள். உளுந்து அரைக்கும் போது, தண்ணீர் தெளித்து அரையுங்கள். நன்றாக வெள்ளையாக பொங்கி வரும் வரை அரையுங்கள்.
இப்போது அரிசி மாவையும் உளுந்து மாவையும் சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள். மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். மாவு புளித்த பிறகு, நீங்கள் வழக்கம் போல, இட்லி குண்டானில் தண்ணீர் கொதித்த பிறகு, இட்லி தட்டில் மாவு ஊற்றி நன்றாக மூடி வேக வையுங்கள். அவ்வளவுதான் பஞ்சு போல இட்லி தயார். அதே போல, இந்த மாவில் நீங்கள் மொறுமொறு தோசையும் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“