டிரை சப்பாத்தி என்கிற புல்கா ரொட்டி பலரும் ஹோட்டல்களில் செய்வது போல, ரவுண்டாக, சாஃப்ட்டா புசுபுசுனு செய்ய முடிவதில்லை என்று சலித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்காக செஃப் சுந்தர் புசுபுசுனு புல்கா ரொட்டி செய்வது எப்படி என்று சூப்பரான 5 டிப்ஸ் சொல்லியிருக்கிறார். நீங்களும் இந்த முறையில் புசுபுசுனு புல்கா ரொட்டி செய்யலாம். ட்ரை பண்ணுங்க.
புல்கா ரொட்டி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு ஆட்டா 250 கிராம்
சர்க்கரை சிறிது அளவு,
உப்பு தேவையான அளவு
புல்கா டஸ்ட் பண்ணுவதற்கு சிறிது அளவு மைதா மாவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிது அளவு சர்க்கரை, சிறிது அளவு தூள் உப்பு போடுங்கள். கோதுமை மாவு அளவில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி மாவைப் பிசைந்துகொள்ளுங்கள். நன்றாகப் பிசைந்ததும், 2 துளி சமையல் எண்ணெய் விட்டுக்கொளுங்கள் அப்போதுதான் மாவு காயாமல் இருக்கும். அல்லது ஒரு ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். ஒரு 30 நிமிடம் மாவை அப்படியே வைத்துவிடுங்கள். எடுத்துப் பார்த்தால் மாவு ரொம்ப சாஃப்ட்டாக மாறி இருக்கும்.
மாவை ஒரு எலுமிச்சை பழம் அளவுக்கு அதாவது 30 கிராம் அளவுக்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
பலரும் புல்கா தேய்ப்பதற்கு கோதுமை மாவை பயன்படுத்துவார்கள். ஆனால், புல்கா தேய்ப்பதற்கு மைதா மாவுதான் பெஸ்ட்.
புல்கா தேய்க்கும்போது, மெல்லியதாக தேய்த்து வைத்துக்கொள்ளுங்கள். புல்காவை விறகு அடுப்பிலோ அல்லது கரி அடுப்பிலோ செய்வதுதான் பெஸ்ட். ஆனால், வீட்டில் இருப்பதை வைத்து செய்வோம். புல்கா செய்வதற்கு 2 பர்னர் உள்ள ஸ்டவ் தேவை. முதலில், சிறிய பர்னரில் ஒரு தவாவை வைத்து, அதில் தேய்த்த மாவைப் போட்டு திருப்பி திருப்பி லேசாக சூடுபடுத்திக்கொள்ளுங்கள், இதில் ஓரளவு வெந்துவிட வேண்டும். இப்போது, அதை ஸ்டவ்வில் பெரிய பர்னரில், தீயில் புல்காவாக சுட்டு எடுக்க வேண்டும். அதற்கு புல்கா செய்வதற்கன வலை போன்ற நெட் மேலே வைத்து அதில் போட்டால் புசுபுசுனு உப்பி புல்கா வரும். அடுத்தது மாவைச் சூடு படுத்தி மீண்டும் நெட்டில் தீயில் புல்கா சுடும் வரை நெட்டை பர்னர் மீது வைத்திருக்காதீர்கள். ஏனென்றால், நெட் நெருப்பாக மாறி கங்குக் போல இருக்கும். அப்போது, தவாவில் சூடுபடுத்திய புல்கா மாவு, நெட் மீது போட்டால் வரிவரியாக கருகிப் போய்விடும். அதனால், நெட் நாம் தீயில் புல்கா சுடுகிற அந்த நேரம் மட்டும்தான் பர்னர் தீயில் இருக்க வேண்டும். சுட்ட உடனே எடுத்து வைத்துவிட வேண்டும். அப்போதுதான், புல்கா கருகாமல் புசுபுசுன் உப்பி வரும். உங்கள் வீட்டில் செஃப் சுந்தரின் இந்த டிப்ஸ் களைப் பயன்படுத்தி, புசுபுசுனு புல்கா செய்து பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.