பித்தப்பைக் கற்கள் என்பது பித்தத்தின் படிவுகள் ஆகும். அவை கட்டியாக திடப்படுத்தப்பட்டு உடலின் பித்தப்பையில் தங்கும். பித்தம் என்பது கல்லீரலால் உருவாக்கப்பட்ட ஒரு செரிமான திரவம் மற்றும் பித்தப்பையில் சேமித்து இருக்கும் கொழுப்பு ஆகும்.
Advertisment
பித்தப்பை கட்டிகள் வலியை ஏற்படுத்தவில்லை என்றாலும் பித்த நீர் பாதையில் தங்கி நாளடைவில் வலியை ஏற்படுத்தும். பித்தப்பை கற்கல் நார்சத்து இல்லாத எண்ணெயில் பொறித்த உணவுகள் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படுகிறது. இவர்கள் என்ன மாதிரியான உணவு சாப்பிட்டால் இந்த பித்தப்பை கல் இருந்து விடுபடலாம் என்று டாக்டர் யோக வித்யா எத்னிக் ஹெல்த் கேர் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
டிப்ஸ் 1: மஞ்சள் கரிசாலை வாங்கி அரைத்து சாறு மட்டும் எடுத்து தேனோடு கலந்து 14 நாட்கள் வெயில் வைத்து எடுத்து தினமும் காலை முப்பது மில்லி லிட்டர் இரவு 30 மில்லி லிட்டர் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டு வந்தால் எளிமையாக இந்த பித்தப்பை கற்கள் வெளியாகிவிடும். கர்ப்ப காலங்களிலும் இதனை பின்பற்றலாம்.
டிப்ஸ் 2: ஆமணக்கு எண்ணெய் ஒரு லிட்டர் மற்றும் கரிசலாங்கண்ணி இலை சாறு அரை லிட்டர், இந்து உப்பு 30 கிராம், பெருங்காயம் 10 கிராம் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு ஆறவிட்டு தினமும் தூங்குவதற்கு முன் 30 மில்லி எடுத்து 120 மில்லி லிட்டர் காய்ச்சிய பாலில் கலந்து 48 நாட்கள் குடித்து வரைந்து பித்தப்பை கற்கள் எளிதாக வெளியேறிவிடும்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.