எலுமிச்சை சாறு மற்றும் அதை உட்கொள்ளும்போது பொதுவான தவறுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி பார்ப்போம். இதுகுறித்து டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
பதப்படுத்தப்பட்ட எலுமிச்சை சாற்றைத் தவிர்ப்பது முக்கியம். ஏனெனில் அது எலுமிச்சையின் சில முக்கியமான பன்புகளை அழித்துவிடும் என்று மருத்துவர் கூறுகிறார். அதற்கு பதிலாக, நல்ல தரமான எலுமிச்சை பழத்தில் இருந்து பிழிந்த எலுமிச்சை சாற்றை குடிக்கலாம். எலுமிச்சை பழத்தில் அழற்சியைுறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மேலும் அவை சிறுநீரக கற்களைக் குறைக்க உதவும். வைட்டமின் சி அதிகம் உள்ளதால் வைட்டமின் சி குறைபாடு மற்றும் ஸ்கர்வி அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
எலுமிச்சை ஆண்டிஹிஸ்டமைன் விளைவைக் கொண்டுள்ளதால் தோல் சம்பந்தப்ட்ட பிரச்சனைகள் குணமாகும் . அவை யூரிக் அமிலம் அதிகரிப்பால் கால் விரல் வீக்கம், வலி ஆகியவை ஏற்படும். இந்த பிரச்சனைகளை எலுமிச்சை சாறு குறைக்க உதவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் இரும்பு சத்து உறிஞ்சுதலை அதிகரிக்க உதவும்.
எலுமிச்சை சாறு குடிக்கும்போது மக்கள் செய்யும் முக்கிய தவறுகள் பற்றி பார்ப்போம்.
எலுமிச்சை ஜூஸ் செய்யகூடாத 4 தவறுகள்|The 4 Mistakes People Make with Drinking Lemon Water(and Juice)
உணவுக்கு முன் எலுமிச்சை சாறு குடிக்கலாம். தண்ணீர் சேர்த்து தான் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்பு எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கரைத்து ஸ்ட்ரா மூலம் குடிக்கவும். வெறும் சாறு மட்டும் குடிக்க கூடாது.
அல்சர் அல்லது இரைப்பை அழற்சி இருந்தால் எலுமிச்சை சாறு எரியும் உணர்வை ஏற்படுத்தும். அதனால் வயிற்றில் புண் அல்லது வீக்கம் இருந்தால் எலுமிச்சை சாறு தவிர்க்கவும்.
எலுமிச்சை சாறு அல்கலோசிஸின் அறிகுறிகளை மோசமாக்கும். அதாவது வாந்தி, கை, கால் நடுக்கம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இதனை குடிக்க கூடாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.